Advertisement

அடிதடியில் ரத்தம் சிந்திய மெட்ரோ ரயில் அதிகாரிகள்!

''எங்க கஷ்டத்தை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்கன்னு, புலம்புறாங்க பா...'' என, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர் பாய்.

''யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை சார்புல, விவசாயிகளுக்கு, கோடை உழவு, மத்திய அரசின், 6,000 ரூபாய் ஊக்கத்தொகை, உயிர் உர விற்பனைன்னு பல திட்டங்களை செயல்படுத்துறாங்க... இதை, மாவட்ட வாரியா முழுமையா நிறைவேற்றணும்னு, அரசு உத்தரவு போடுது பா... ''மாவட்ட அதிகாரிகளும், 'திட்டங்களை, 100 சதவீதம் அமல்படுத்திடுறோம்'னு உயர் அதிகாரிகளிடம் சொல்லிடுறாங்க...

''ஆனா, களத்துல வேலை பார்க்கிற தோட்டக்கலை அலுவலர்கள், 'அரசின் திட்டங்களை, விவசாய நிலங்கள்ல அமல்படுத்துறதுல, நிறைய தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கு... இதை புரிஞ்சுக்காம, அதிகாரிகள் வாக்கு குடுத்துட்டு, எங்களை படுத்தி எடுக்கிறாங்க'ன்னு புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர் பாய்.

''புதுசா ஒரு பதவியை உருவாக்க, எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார், குப்பண்ணா.

''எங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜுவின் சொந்த ஊரான, மதுரையில, மாவட்ட கூட்டுறவு வங்கி தேர்தல், சமீபத்துல நடந்தது... இதுல, அமைச்சரின் ஆதரவாளரான, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில நிர்வாகி, பாண்டியன், தலைவரா தேர்வு செய்யப்பட்டார் ஓய்... ''இவருக்கு, கூட்டுறவு துறையில, அவ்வளவா அனுபவம் இல்லை... அதனால, துறை சம்பந்தமா, சட்டரீதியா ஆலோசனைகள் தரதுக்காக, ஓய்வு பெற்ற, கூட்டுறவு துறை அதிகாரி ஒருத்தரை, பாண்டியனுக்கு நேர்முக உதவியாளரா நியமிக்க, ஏற்பாடு நடக்கறது...

''ஆனா, அந்த ஓய்வு அதிகாரி, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தரிடம், பல வருஷமா உதவியாளரா இருந்தவராம்... இதனால, உதவியாளர் நியமனத்துக்கு, அ.தி.மு.க., தரப்பும், வங்கி ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ரத்தம் சிந்துற அளவுக்கு, அடிதடியில இறங்கிட்டாங்க...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

''சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துல, நிர்வாக இயக்குனருக்கு, அடுத்த நிலையில, ரெண்டு அதிகாரிகள் இருக்காங்க... கான்ட்ராக்டர்கள் சிலருக்கு நடந்த பணப் பட்டுவாடாவுல தவறு நடந்திருக்கிறதா, ரெண்டு பேரிடமும், நிர்வாக இயக்குனர், விளக்கம் கேட்டிருக்காருங்க... ''இந்த பிரச்னைக்கு காரணம் நீதான்னு, ரெண்டு பேரும், மாறி மாறி குற்றம் சாட்டி, வாக்குவாதம் பண்ணி, ஒரு கட்டத்துல, அடிதடியாகிடுச்சுங்க... இதுல ஒருத்தருக்கு கையில அடிபட்டு, ரத்தம் கொட்டுச்சு...

''இது சம்பந்தமா, அங்க, எஸ்.பி.,யா இருக்குற பெண் அதிகாரியிடம், 'இரண்டு பேரிடமும் விசாரிச்சு உண்மையை சொல்லுங்க... விசாரணை, மத்த யாருக்கும் தெரியாம, ரகசியமா நடக்கணும்'ன்னு நிர்வாக இயக்குனர் சொல்லியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Oh

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Super like this

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    யார் எவரிடம் எவ்வளவு ‘வாங்கினார்’ என்பது இந்தமாதிரி சண்டைகளில் தானே veli வந்துவிடும். தன் பங்கை யார் எவ்வளவு அமுக்கினார் என்பதையெல்லாம் வெளிக்கொண்டுவர கமுக்கமாகத்தானே விசாரிக்க வேண்டும் இதெல்லாம் அலுவலக , ரகசியம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement