Advertisement

'நுாறு பேர் சேர்த்தாலே போதும்!'

மதுரை புறநகர் மாவட்ட, பா.ஜ., சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர், மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. மாநில துணை தலைவரான, மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'கட்சியில், 20, 30 ஆண்டுகளாக இருப்பவர்களுக்கு தான், முக்கியத்துவம் வழங்கப்படும். ஆனால், கட்சியில் சேர்ந்த இரண்டரை ஆண்டுகளில், என்னை, மாநில துணை தலைவராக்கியதுடன், ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில், வேட்பாளராக நிறுத்தியதற்காக, பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என, நெகிழ்ச்சியுடன் கூற, கூட்டத்தில் நிசப்தம் நிலவியது.

தொடர்ந்த அவர், 'நம் கட்சியில், 'பூத்'துக்கு குறைந்தது, 100 பேரையாவது உறுப்பினர்களாக சேர்த்து விட்டால் போதும். வரும் எல்லா தேர்தல்களிலும், வெற்றி பெற்று விடலாம்' எனக் குறிப்பிட, கூட்டத்தில் பலத்த ஆரவாரம் எழுந்தது. 'இப்படி, திராவிடக் கட்சிகள் பாணியில் உசுப்பேத்தினா தானே, வேலை பார்க்க முடியும்...' என, தொண்டர் ஒருவர், 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் குஷியாகினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement