Advertisement

'டவுட்' தனபாலு

காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: கர்நாடகாவில், எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., தலைவர்கள் விலை பேசி வருகின்றனர். ஜனநாயக முறையில் அமைந்துள்ள அரசை கவிழ்க்க, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டவுட் தனபாலு: அதிகப்படியான இடங்களில் வென்ற, பா.ஜ., ஆட்சி அமைத்திடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக, மூன்றாமிடம் பெற்ற, ம.ஜ.த.,வை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த நீங்க, ஜனநாயகம் குறித்துப் பேசுறீங்க... நீங்க செய்தால், அது நியாயம்... உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மனசாட்சிப்படி நடந்தால், அது துரோகம்கறது, என்ன ஊரு கணக்கு என்பது தான், மக்களின், 'டவுட்!'

***

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவி: ஒருவரை, 'ஊழல்வாதி, ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்' என, குற்றம் சாட்டிவிட்டு, அதே நபரை, கட்சியில் சேர்த்து புகழ்பவரை, தலைவராக, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

டவுட் தனபாலு: சம்பவத்தைச் சொல்லிட்டீங்க... சம்பந்தப்பட்ட ஆள் யார் என்பதையும் சொல்லிடுங்க... கரூர்காரரைத்தானே குறிப்பிடுறீங்க... அது கிடக்கட்டும்...'ஊழல் அரசுன்னு சொன்னவர்கள், ஓரிரு மாதத்தில், அதே அரசில் துணை முதல்வர் பதவியை ஏற்று, ஆட்சியை வானளாவப் புகழ்வது மட்டும் சரியா... இதை மக்கள் ஏற்கலையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

***

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்: நாட்டில் நல்ல மழை பெய்து, விவசாயிகள் மகிழ்ச்சியுடனும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: ஆட்சியாளர்கள் ஆளாளுக்கு, இயற்கை மீது முழு பொறுப்பைச் சாட்டி வர்றீங்களே... பருவம் தப்பாது மழை பெய்யக்கூடிய சூழலையும், மழை நீரை சேகரித்து, ஆண்டு முழுமைக்கும் பயன்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளையும், யார் செய்வது... இந்தப் பொறுப்பு யாருடையது என்பதுதான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மனசாட்சிப்படி நடந்தால், அது துரோகம்கறது........\\ அவங்க யாரும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்த முடிவு எடுக்கலை.. தங்களுக்கு மந்திரிப் பதவி கிடைக்கலங்கற கடுப்புலதான் இப்படி பண்ணியிருக்காங்க ...........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement