Advertisement

'கட்சி தாவ துண்டு போடுறாரு!'

சென்னை, அடையாறில், முத்தமிழ் பேரவையின், பா.ம.க., தமிழ் படைப்பாளிகள் இயக்க கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதற்கு, விழுப்புரம் லோக்சபா தொகுதியில், பா.ம.க., வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்ற, வடிவேல் ராவணன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அவர், பா.ம.க., வேட்டியும், அ.தி.மு.க., துண்டும் அணிந்திருந்தார்.

இதை பார்த்த கட்சியினருக்கு, ஏன் இப்படி வந்திருக்கிறார் என, சந்தேகம் வந்தது; ஒருவர், அது பற்றி, அவரிடம் கேட்க, அவர் நெளிய ஆரம்பித்தார். 'தேர்தல் பிரசாரத்துல, அ.தி.மு.க., கட்சியினர், நிறைய துண்டு போட்டாங்க... அவசரத்துல கவனிக்காம, பா.ம.க.,விற்கு பதிலா, அக்கட்சி துண்டை எடுத்து போட்டுட்டு வந்திட்டேன் போலிருக்கு...' எனக் கூறியபடியே, துண்டை, தன் உதவியாளரிடம் கொடுத்தார்.

கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், 'கட்சி தாவுறதுக்கு, துண்டு போடுறாருன்னு சொல்லுறது இது தானா...' என, 'கமென்ட்' அடிக்க, சுற்றியிருந்தோர், 'கலகல'வென சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ‘தேர்தல் பிரசாரத்தின்போதே துண்டு போட்டாயிற்று’ என்றல்லவா சொல்கிறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement