dinamalar telegram
Advertisement

உடம்பை வளர்ப்போம்;உயிர் வளர்ப்போம்!

Share

'உடம்பார் அழியின்உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்உடம்பை வளர்க்கும்உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன்உயிர் வளர்த்தேனே'என்று உடம்பின் உன்னதத்தைப் பறைசாற்றுகின்றது திருமூலரின்திருமந்திரம்.


மனிதன் வாழ்வதற்கு உயிர் அவசியம். அந்த உயிர் வாழ்வதற்குஉடம்பு அவசியம் என்பதை மேலே கண்ட மந்திரம் நமக்கு உணர்த்துகிறது. அதனால் தான் 'சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும்' என்ற சொலவடை வாழ்க்கை முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.கல்வி கற்பதில் உடல்ஆரோக்கியமாக இருந்தால்தான் உள்ளம் உறுதியாக இருக்கும். உள்ளம் உறுதியாக இருந்தால்தான் ஆன்மா ஆரோக்கியம் பெறும். இப்படிப்பட்ட கல்வியைத்தான் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்று நம் மகாத்மா கேட்டுக்கொள்கிறார்.

ஆனால் பள்ளிகளில் உடற்பயிற்சி இல்லை. இல்லங்களிலும் உடற்பயிற்சி இல்லை. இந்த நிலையை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நோயற்ற வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.உண்மையான கோடீஸ்வரர்கள்கோடி கோடியாக வைத்திருப்பவர்கள் எல்லாரும் கோடீஸ்வரர்கள் அல்லர். மருத்துவமனைக்குச் செல்லாமல் யார் வாழ்ந்து காட்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையான கோடீஸ்வர்கள். கோடிகளில் புரண்டாலும், விரும்பியதை உண்ண முடியால், விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாமல் நிம்மதியாக உறங்கமுடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பொம்மை வாழ்க்கையால் என்ன பயன்? எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

அப்பொழுது தான் நாமும் நம்மைக் சார்ந்தவர்களும் வளமாக, நலமாக வாழ முடியும்.நமது வாழ்க்கைக்குத் துணையாக முதலில் வருவது உடம்பு தான். அதன் பின்னரே உறவுகள், நண்பர்கள் வருகிறார்கள். இவர்கள் கூட வாழ்க்கையில் ஒரு அங்கம் மட்டுமே, வருவார்கள், வாழ்வார்கள்,சென்றுவிடுவார்கள். உடல் மட்டும்தான் வாழ்க்கைத் துணையாக நிழலில் கூட தொடர்ந்து வரும்.நிரந்தர முகவரிநாம் வசிக்கும் இடமோ, பணியாற்றும் அலுவலகமோ, பெற்றுஇருக்கின்ற பட்டமோ, வகிக்கின்றபதவியோ, சூழ்ந்திருக்கும் உறவினர்களோ, வைத்திருக்கும் பணமோ நமக்கு நிரந்தர முகவரியைத் தந்துவிடாது.


நமது நிரந்தர முகவரி உடம்பு மட்டும் தான். அதனால் தான் திருமூலர்'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று குறிப்பிடுகிறார்.'பணம் என்னடா பணம் பணம்குணம் தானடா நிரந்தரம்'என்பதை மறந்து, நம்மில் பலர் உண்ணாமல், உறங்காமல் நாள் முழுவதும் பணத்திற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதைச் சகித்துக் கொள்ளமுடியாத நம் உடம்பும் ஒரு கால கட்டத்தில் நம்மை 24 மணிநேரமும் படுத்த படுக்கையாக முடக்கி விடுகிறது. உடல் முடங்கி விட்டால் முகவரி முடிந்து விடும்.


எனவே உடல் நலம் பேணுவதில் கண்ணும் கருத்துமாய் இருப்போம்.வினைக்கேற்ற எதிர்வினைஒவ்வொரு வினைக்கும்அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பது அறிவியல் உண்மை மட்டுமல்லாது வாழ்வியல் உண்மையும் கூட. எந்த அளவிற்கு உடல் நலம் பேணுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அந்த அளவிற்கு உடலும் நம்மை ஆரோக்கியமாக வாழச் செய்ய முக்கியத்துவம் கொடுக்கும். எந்த அளவிற்கு உடலுக்கு நாம் ஓய்வு கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு உடல் நம் உள்ளத்துக்கு ஓய்வு கொடுக்கும். நாம் உண்ணும் உணவு, எண்ணும் எண்ணம், உடுத்தும் உடை, செய்யும் உடற்பயிற்சி இவைகளைப் பொறுத்தே நாம் நலமோடு வாழ உடல் நமக்கு உறுதுணையாக நிற்கும்.

சுருங்கச் சொன்னால் சத்தான உணவை உண்டு, சரியான உடற்பயிற்சிகள் மேற்கொண்டால் உடலும் நம்மை புத்துணர்ச்சியுடன் பாதுகாத்துக்கொள்ளும்.உண்ணும் உணவு துாய்மையானதாகவும், சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்து துரித உணவுகளை உண்டு உடல்நலத்திற்குக் கேடு தேடிக்கொள்கின்றனர். 'பசித்துப் புசி' என்பதற்கேற்ப 'பசியெடுத்தால் உண்ணவேண்டும், தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்த வேண்டும்' என்ற கோட்பாடுகளை கடைப்பிடித்து வந்தால் நோயற்ற வாழ்க்கை வாழலாம். சிலர் அளவுக்கதிமாக வயிற்றில் திணித்து ஜீரணமாவதற்குள் மறுவேளையும் உணவெடுத்துப் பழகுவதால் உண்ட உணவு செரிக்காமல் பக்க விளைவுகளாகப் பல நோய்களை உருவாக்குகிறது.


நலவாழ்வுக்கு ஒரு மணி நேரம் இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டும் உடம்பிற்காகச் செலவழித்தால் மீதமுள்ள 23 மணி நேரமும் உடல் நம்மைக் கவனமுடன் பேணிக்காக்கும். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுவே. ஒரு மணி நேரம் உடற்பயற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளில் முறையாக ஈடுபட்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். ஒரு மணி நேரத்தில் 'ஒரு' என்ற சொல்லானது நேரத்தை மட்டுமல்லாது 'ஒப்பற்ற' என்ற அர்த்தத்தையும் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடுகிறது.யோகாவை தினமும் முறைப்படி செய்து வந்தால் நோய் அணுகாது.


உடல் உறுப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த வளர்ச்சியடையச் செய்கிறது யோகா.நமது பாரதப் பிரதமர் யோகாவை தன் வாழ்கையில் முதன்மைப்படுத்தியதால்தான் 69 வயதிலும் 28 வயது இளைஞனைப் போல செயலாற்ற முடிகிறது.பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை காலையில் எழுந்ததும் செய்து வந்தால் சுவாசம் துாய்மையடைவதுடன், நுரையீரலும், சுவாச மண்டலமும் துாய்மையடைகிறது. இதயத்திற்குச் செல்லும் ரத்தம் சுத்தமடைகிறது.பல நோய்களுக்குக் காரணியாக மன அழுத்தம் உள்ளது. தியானம் மன அழுத்தத்தைப் போக்கி அமைதியாக வாழ வழிவகை செய்கிறது.


மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ணங்களை நெற்றியின் மத்தியில் நிறுத்தி தியானிப்பதே தியானமாகும். ஒரு நாளைக்கு இருபது முதல் முப்பது நிமிடம் வரை தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும்.
ச.ஜெயராஜ்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு)சாலைக்கிராமம்94437 83218

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement