Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: தமிழகத்தில், ஒரு தற்காலிக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என, உறுதியாகக்கூறுகிறேன்.

டவுட் தனபாலு: 'இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான உடன், ஆட்சி மாற்றம் ஏற்படும்... ஸ்டாலின் முதல்வராவார்... பல எம்.எல்.ஏ.,க்கள், எங்களுக்கு ஆதரவு தரப் போறாங்க'ன்னு, பேசி வந்தீங்க... அப்படிக்கிப்படி நடக்குமோன்னு மக்களும் கொஞ்சம் நம்பினாங்க... எப்போ நீங்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றீங்களோ, அன்றைக்கே உங்க உண்மை நிலவரம் தெரிஞ்சிடுச்சு... இனி இந்தப் பேச்சு, மக்களிடம் எடுபடுறது, 'டவுட்' தான்...!

இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன்: ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே கல்வி, ஒரே மின்கொள்கை என்பது, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறதோ என்றஅச்சத்தை ஏற்படுத்துகிறது.

டவுட் தனபாலு: ஒருங்கிணைப்புக்கும், பிரித்தாளுகைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதோ... எதையும் கண்டுக்காமல் விட்டால், 'மத்திய அரசு, பாகுபாடு பார்க்குது; பாரபட்சம் காட்டுது'ன்னு, குரல் எழுப்புவீங்க... அனைத்தையும் சமமாக பாவித்தால், சர்வாதிகார குற்றச்சாட்டை வைப்பீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்.

டவுட் தனபாலு: தொடரணும்கற ஒரே காரணத்துக்காகத் தான், கட்சியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, உங்களுக்கு, ராஜ்யசபா சீட்டை, அ.தி.மு.க., தாரை வார்த்து தந்திருக்கு... இதை மனதில் வைத்து, உள்ளாட்சி சீட் பங்கீட்டில், கொடுப்பதை வாங்கிக் கொள்வீங்களா... இல்லை, நிபந்தனை ஏதும் விதித்து நெருக்கடி கொடுப்பீங்களா என்பது தான், இப்போதைய, 'டவுட்'டாக இருக்கு...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement