Advertisement

'கமிஷனுக்கு' போராடிய எம்.எல்.ஏ.,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகர் கோவிலில், வரும், 24 முதல், 28 வரை, ஆடிக் கிருத்திகை விழா நடக்கிறது. இதற்காக, திருவள்ளூர் கலெக்டர், மகேஸ்வரி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், மலைக் கோவிலில் நடந்தது. திருத்தணி, டி.எஸ்.பி., சேகர், 'ஆடிக்கிருத்திகை விழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நகரின் முக்கிய சாலைகளில், தற்காலிக கடைகளை அனுமதிக்கக் கூடாது' என்றார். இதற்கு, திருத்தணி எம்.எல்.ஏ., - நரசிம்மன் எதிர்ப்பு தெரிவித்தார்.

'பஸ்கள், ஆட்டோக்கள், திருத்தணி பஜாருக்குள் நுழைய அனுமதி கிடையாது' என, டி.எஸ்.பி., கூறியதும், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள் இருவர், 'பக்தர்களின் வசதியை பார்க்காமல், 'கமிஷன்' கிடைக்கும் என்பதால், அரசியல்வாதிகள் இப்படி, அரசு அதிகாரிகளிடம் சண்டை போடுகின்றனர்' என, 'கமென்ட்' அடித்ததும், அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் நெளிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    கட்சியில் உறுப்பினராக இருப்பதே இந்தமாதிரி கமிஷன் அடிக்கத்தான். இதற்க்கு பெயர்தான் மக்கள் பணி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement