Advertisement

பல்கலை பதிவாளர் நியமனம் நேர்மையாக நடக்குமா?

''தேவையில்லாம, மூக்கை நுழைக்கிறார் 'மாஜி'ன்னு, கோபத்துல இருக்காங்க பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், அன்வர் பாய்.

''எந்தக் கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சமீபத்துல முடிஞ்ச சட்டசபை இடைத்தேர்தல்ல, விளாத்திகுளம் தொகுதியில, அ.தி.மு.க.,வுல, 'சீட்' கிடைக்காம, சுயேச்சையா போட்டியிட்ட மார்க்கண்டேயன், குறைஞ்ச ஓட்டுகள் தான் வாங்குனாரு... அவரை, யாருமே கண்டுக்கலை பா...

'' ஆனா, திருச்சியைச் சேர்ந்த, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் நேரு, அவரை, தி.மு.க., வுக்கு இழுத்து போடுற வேலையை ஆரம்பிச்சிருக்காரு... இதுக்கு காரணம், ரெண்டு பேரும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவங்க...

'' துாத்துக்குடி மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, இது தெரிய வந்ததும், 'எங்க மாவட்டத்தைச் சேர்ந்தவரை, திருச்சியைச் சேர்ந்தவர், எதுக்கு கட்சியில சேர்க்கணும்... எல்லை மீறி மூக்கை நுழைக்கிறாரே'ன்னு கொதிச்சு போயிருக்காங்க பா...'' என்றார் அன்வர் பாய்.

''போலி பேர்வழிகளை காப்பாத்த முயற்சி நடக்கு வே...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார், அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தமிழக மின்வாரியத்துல, பல ஆயிரம் பேர் வேலை பார்க்காவ... அதுல, சிலர் போலி சான்றிதழ்கள் குடுத்து, வேலையில சேர்ந்திருக்காவ வே...

''இன்னும் சிலர், ஊதிய உயர்வு கிடைக்கும்னு, கூடுதல் கல்வி தகுதியை முடிச்சிட்டதா, போலி சான்றிதழ்களை குடுத்திருக்காவ... இப்படி வேலை பார்த்துட்டு இருந்த, ஆறு பேரை, சென்னை தலைமை அலுவலகத்துல, சமீபத்துல, கண்டுபிடிச்சுட்டாவ வே...

''ஆனா, இதை ரகசியமா வச்சிருக்காவ ஒருத்தரை காப்பாத்துற முயற்சியா, விருப்ப ஓய்வுல போங்கன்னு சொல்லி, வீட்டுக்கு அனுப்பிட்டாவ... மத்தவங்களை காப்பாத்துற முயற்சி, திரைமறைவுல நடந்துட்டு இருக்கு வே... இது பத்தி தீர விசாரிச்சா, நிறைய பேர் சிக்குவாங்க...'' என்றார் அண்ணாச்சி.

''தகுதியுள்ளவரை, நியமிக்கணும்னு சொல்றாங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அந்தோணிசாமி.

''எந்த பதவிக்கு பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

''மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பதவிக்கான அறிவிப்பை, சமீபத்துல வெளியிட்டிருக்காங்க... இதுக்கு மொத்தம், 24 பேர் விண்ணப்பிச்சு இருக்காங்க... இதுல, பாலியல் புகார் விசாரணை நிலுவையில இருக்கிறவங்களும் அடக்கமாம்...

''துணைவேந்தர் கிருஷ்ணன், தகுதி, திறமை உள்ள ஒருத்தரை, எப்படியாவது இந்த பதவிக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறாருங்க... ஆனா, அரசியல் பின்னணியில, தகுதியில்லாத பலரும், பதிவாளர் பதவிக்கு காய் நகர்த்திட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''துாய்மையான நிர்வாகம் பத்தி அடிக்கடி பேசற, கவர்னர் புரோஹித், இந்த விவகாரத்துல கவனமா இருக்கணும் ஓய்...'' என்றவாறே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கவர்னரா? மதுரை கா. என்றாலே பின்னங்கால் பிடரிப்பட ஓடிவிடுவாரே .....அனுபவம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement