Advertisement

'கடைசி வரைக்கும் போஸ்டர் தான் ஒட்டணும்'

Share

சென்னை விமான நிலையத்தில், கனிமொழி, எம்.பி., சமீபத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வகித்த பதவி தான், இளைஞரணி செயலர் பதவி. தந்தையை போல, சிறப்பாக பணியாற்ற, அவரது மகன், உதயநிதிக்கு வாழ்த்துகள்' என்றார்.

அங்கிருந்த, இளம் நிருபர் ஒருவர், 'சேத்து வச்ச சொத்தை, வாரிசுக்கு கொடுக்குற மாதிரி, அப்பாவோட பதவி, மகனுக்கு தான்னு சாதாரணமா சொல்றாங்க... அப்படின்னா, தி.மு.க.,வுல தொண்டனா போஸ்டர் ஒட்டுறவரு மகன், காலம் காலமாக போஸ்டர் தான் ஒட்டணும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இதைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜாஜி சொன்னார். அப்பன் செய்த தொழிலை விடாமல் மகன் செய்யவேண்டும் என்று.

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    குவார்ட்டரும் பிரியாணியையும் விட்டுவிட்டீர்களே...

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எல்லாக் கட்சியிலும் தொண்டன் போஸ்டர் ஒட்டவும், கோஷம் போடவும் பிறந்தவன்தான் போனால் போகிறதென்று சிங்கிள் டீ கிடைக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement