Advertisement

அசுரா


nsimg2312538nsimg
சென்னை தியேட்டர்காரன் குழுவினர் சமூக நலத்துடன் பல்வேறு காரியங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

nsmimg702197nsmimg
தண்ணீர் பிரச்னையை மையாக வைத்து இவர்கள் நடத்திய தெருக்கூத்து மிகவும் பிரபலம் இதே போல கதைக்களம் பகுதியும் பார்வையாளர்களிடம் புகழ் பெற்றதாகும்.

nsmimg702202nsmimg
இந்த குழுவின் சார்பில் சமீபத்தில் முழு நீள சரித்திர நாடகம் நடத்தப்பட்டது.‛அசுரா' என்ற தலைப்பைக் கொண்ட ஆங்கில நாடகம் இது.இலங்கையை ஆண்ட ராவணன் பார்வையில் இந்த நாடகம் செல்கிறது.


nsmimg702203nsmimg
ராவணன் தனது அகங்காரம் மற்றும் பிடிவாதம் காரணமாக தம்பியை பிரிகிறான் தனயனை இழக்கிறான் ஆனாலும் தனது பிடிவாதத்தை விட்டுத்தர மறுக்கிறான்.கடைசியில் ராமணால் தோற்கடிக்கப்படும் போதுதான் தான் செய்த தவறுகளை உணர்கிறான் ஆனால் அது காலம் கடந்த உணர்வாகிப் போகிறது.


நாடகத்தில் நடித்த சென்னை பாய்ஸின் ஆங்கில உச்சரிப்பு மிக அருமை நாடகத்தின் பிரதானமே வசனம்தான்.


‛இந்திரஜித் நீ எத்தனை விதமான அம்புகள் விட்டாலும் அதனை தடுத்து தகர்க்கும் தடுப்பாயுதம் என்னிடம் உண்டு' என்றெல்லாம் தமிழில் எப்படி ஆவேசமாக வசனம் பேசப்படுமோ? அதே போன்ற வேகத்துடனும் வீரியத்துடனும் ஆங்கிலத்திலும் வசனங்கள் பேசப்பட்டது, பார்வையாளர்களின் கைதட்டலை பெரிதாக பெற்றது.


போர்க்களத்தில் பிணமாகக் கிடக்கும் தன் மகனைப் பார்த்து அழும் ராவணனின் துடிப்பும் நடிப்பும் அருமை அதே போல இந்திரஜித்தும் அவனது மனைவிக்கும் நடக்கும் ஊடலும் உரையாடலும் மிக அழகு.


உலக பாா்வையாளர்களின் ரசனைக்கு உருவாக்கப்பட்ட இந்த நாடகத்தை இயக்கி தயாரித்து ராவணனானாகவும் நடித்து இருப்பவர் சபரிவாஷ்,இசை பவுல்ஜேக்கப்,லைட்டிங் ஜெயகுமார்,ஆனந்த்,செட் அருள் ஆரத்தி,ஆடை வடிவமைப்பு ஜாய்அந்தோணி



இந்த தியேட்டர்காரன் குரூப் அடுத்தடுத்து இது போன்ற நாடகங்களை வழங்க வேண்டும் என்றால் ரசிகர்களின் உதவி தேவை நாடக இயக்குனர் சபரியின் எண்:9884966613.


எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in











Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement