Advertisement

ஓசோன் பொத்தல் பாதிப்புகள் குறைகிறதா?

Share

உண்மை தான். எண்பதுகளில் அடையாளம் காணப்பட்ட ஓசோன் படலத்தின் பெரிய பொத்தல், சற்று அடைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அடைப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மெதுவாகவே நிகழ்கிறது.
எனவே, பூமியின் வளி மண்டலத்தின் வெளிப் பரப்பில் போர்த்தியிருக்கும் ஓசோன் பொத்தலால், இப்போது சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, பருவ நிலை மண்டலங்களின் நகர்வு, மாறும் கடல் நீர் வெப்பநிலை, சில பலகீனமான உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவை ஆராயப்படுகின்றன.
ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வுக் குழுவின்படி, அண்டார்டிகா துருவப் பகுதியை சுற்றியுள்ள காற்றோட்ட மண்டலம், வடக்கும், தெற்குமாக அலையும் தன்மை உடையது.
ஆனால், அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள ஓசோன் பொத்தல், இந்த காற்றோட்டத்தை மேலும் தெற்கு நோக்கி நகர்த்தியுள்ளது. இதனால், மழைப் பொழிவு, கடல்நீர் வெப்பநிலை, கடலடி நீரோட்டம் போன்ற அனைத்தும் நகர்ந்துள்ளன.
இதன் விளைவாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளின் இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது.
கடலில் எங்கே பாசி இருக்கும், மீன்கள், சீல்கள், வால்ரஸ்கள் போன்றவை எங்கே இருக்கும் என்பது அடியோடு மாறியிருக்கிறது. இதனால், கடல் உயிரினங்களின் உணவுச் சுழற்சி தாறுமாறாகியிருக்கிறது என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பசுமைக் குடில் வாயுக்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள்ளேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், ஓசோன் படலம் இருக்கும் மேல் படலம் குளிர்ச்சியடைகிறது.
இந்த குளிர்ச்சியால், ஓசோன் கரைந்துவிடுகிறது என, ஐ.நா., குழு விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஓசோன் பொத்தல் கூடி வந்தாலும், அது முற்றிலும் கூடாததால் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement