Advertisement

அறிவியல் எதிர்ப்பாளர்களை தடுக்க முடியுமா?

Share

பொது விவாதங்களில், அறிவியல் மறுப்பாளர்களை சமாளிப்பது எப்படி? இது குறித்து ஆறு சோதனைகளைச் செய்த, இரு விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு, 'நேச்சர்' இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தடுப்பூசி, பருவ நிலை மாற்றம் போன்ற அறிவியல் உண்மைகளை முற்றிலுமாக மறுப்பவர்கள், அந்த விவாதத்தை கவனிக்கும் அப்பாவி நேயர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்தால், அவர்கள் சொல்வது தான் உண்மை என, பார்வையாளர்கள் நம்பிவிடுவார்கள். எனவே, விவாதத்திற்குரிய தலைப்பு பற்றிய அறிவியல் பூர்வமான சில தகவல்களை பதிலடியாகத் தருவது, நடைமுறை ஆதாரங்களை முன்வைப்பது, மறுப்பாளர்களை பின்வாங்க வைக்கும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் மறுப்பாளர்கள் முன்வைக்கும் வாதங்கள் குறிப்பிட்ட சில தர்க்க முறைகளையே பின்பற்று வதால், அதை கவனித்து, அதற்கு மாற்றான தர்க்க முறைகளைக் கையாள்வது, அப்பாவிகள் அறிவியல் உண்மைகளை வெறுக்காமல் இருக்க உதவும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement