Advertisement

சக்தி தரும் மேசை!

ஸ்பெயினைச் சேர்ந்த, 'புரோட்டான் நியூ எனர்ஜி பியூச்சர்' ஒரு, 'சக்தி வாய்ந்த' மேசையை உருவாக்கியிருக்கிறது. 'இ - போர்டு' இந்த மேசை மூலம், அலைபேசி, மடிக்கணினி, பலகைக் கணினி ஆகியவற்றை மின்னேற்றம் செய்து கொள்ளலாம்.எப்படி? மேசையின் மேற்பரப்பில் சூரிய மின் தகடு பதிக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளி,முதல் அறை விளக்கின் ஒளி வரை எது இ - போர்டு மீது பட்டாலும், அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அந்த மின்சாரத்தை, கம்பியில்லா மின்னேற்றம் மூலம் கருவிகளுக்கு பாய்ச்சி, கருவிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. அதாவது, இலவச மின்சாரத்தை தருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement