Advertisement

திசுக்களை அச்சிடும், '3டி' பிரிண்டர்கள்

சில ஆண்டுகளுக்கு முன், ஆய்வகத்தில் மனித உடல் திசுக்களை முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம், 'அச்சிடும்' முறை உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், சமீபத்தில் சிகாகோவிலுள்ள, இல்லினாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதில் ஒரு புதுமையை செய்து உள்ளனர்.

உயிருள்ள செல்களை, ஊட்டச்சத்துள்ள கரைசலுடன் சேர்த்து, 'உயிரி மை' போல ஆக்குவர். இந்த மையை, '3டி பயோபிரின்டிங்' எனப்படும், உயிரி முப்பரிமாணஅச்சியந்திரம் மூலம், நேனோ அளவுள்ள சாரம் போன்ற அமைப்பினிடையே செலுத்துவர்.

அந்த நுண் சாரங்களுக்கிடையே செல்கள் பல்கிப் பெருகி வளர, அந்த சாரம் மெல்ல கரைந்துவிடும். ஆனால், சிகாகோ விஞ்ஞானிகள் உருவாக்கிய முறை, நுண் குளிகைகளைக் கொண்ட ஹைட்ரோ ஜெல்லை பயன்படுத்துகிறது.

நாளடைவில் கரையும் ஹைட்ரோஜெல் நிறைந்த பையிற்குள், உயிரி முப்பரிமாண அச்சியந்திரத்தின், பேனா போன்ற முனை உயிரி மையை செலுத்துகிறது. எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தை பையிற்குள் உருவாக்கலாம்.சில வாரங்களில் செல்கள் பின்னிப் பிணைந்து வளர்ந்ததும், புறஊதா கதிரில் காண்பித்து, லேசாக அசைத்தால், ஹைட்ரோஜெல் குளிகைகளை தனியே பிரித்துவிடலாம்.

பக்குவமடைந்த திசு மட்டும் அதே வடிவத்தில் வளர்ந்து நிற்கும்.எலியின் செல்களை வைத்து செய்த இச்சோதனை நன்கு பலனளித்திருப்பதாக, சிகாகோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement