Advertisement

திருடரை பிடிக்கும் புத்திசாலி கேமரா!

பிரபல தொடர் கடையான வால்மார்ட், அமெரிக்காவிலுள்ள தன், 1,000 கடைகளில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட படக் கருவிகளை பொருத்திஇருக்கிறது.இந்தக் கருவிகள் படம் பிடிப்பதை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அலசி, திருட்டை கண்டுபிடித்து எச்சரிக்கையை கடை பணியாளருக்கு அனுப்பிவிடும்.

வால்மார்ட் கடந்த ஆண்டு மட்டும் திருட்டு, கடை பணியாளர் கவனக்குறைவு ஆகியவற்றால், 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்களை இழந்திருக்கிறது.இப்படி பல லட்சம் கோடி ரூபாய் இழப்பதை தடுக்க, சில ஆயிரம் கோடிகள் செலவு செய்து, அயர்லாந்திலுள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனமான, 'எவர்சீன்' வசமிருந்து ஒரு மென்பொருளை வாங்கியிருக்கிறது வால்மார்ட்.

படக் கருவிக்கு டிமிக்கி கொடுத்து திருடுவது, 'பில்' போடுமிடத்தில் பணியாளர்கள், 'ஸ்கேன்' செய்யாமல் விட்ட பொருட்கள், வாடிக்கையாளர் மறதியாக வெளியே எடுத்துச் செல்லும் பொருட்கள் என்று ஏற்படும் இழப்புகளை, செயற்கை நுண்ணறிவுள்ள படக் கருவிகள் தடுக்கும் என, வால்மார்ட் நம்புகிறது.அதன்படியே கடந்த சில மாதங்களில், வால்மார்ட் நிறுவனத்துக்கு, திருட்டால் ஏற்படும் இழப்பை கணிசமாக குறைக்க முடிந்துஇருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement