Advertisement

காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறி!

மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் அடுத்த தலைவர் யார் என்று முடிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சூழ்நிலை இந்திய அரசியல் எதிர்காலத்தில் இரு கட்சி முக்கியத்துவத்தை குறைத்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசியலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இரு ஐந்தாண்டுகள் நடந்த போதும் காங்கிரசின் தனித்துவம் தேயத் துவங்கியது. அதற்கு காரணம் இந்திராவுக்கு பிறகு காங்கிரஸ் மேற்கொண்ட சில பொருளாதார அணுகுமுறைகள் அக்கட்சியின் மீதான மக்கள் ஈர்ப்பைக் குறைத்தன.இதற்குக் காரணம் வழிவழியாக வாரிசு தலைமையை முறைப்படுத்தும் கூட்டம் அக்கட்சியில் அதிகரித்தது.இப்போது காங்கிரஸ் சரிவதால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய கட்சிகள் ஏன் வளரவில்லை என்பதை அலசும் காலம் வந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்திய அரசியலைப் பார்த்தால் இடது வலதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அடிப்படை கோட்பாடுகளை தேர்தல் நடைமுறைகளுடன் சேர்த்துக்கொண்டனர்; இந்திய கலாசார சூழ்நிலை இதை நிர்ப்பந்தப்படுத்தியது. அதனால் அவர்களின் அடிப்படையான வர்க்கப் போராட்ட தத்துவம் சிறிது சிறிதாக மங்கியது.காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட காந்தியடிகள் கூறியது அதன் மீதான அதிருப்தி காரணம் அல்ல; சுதந்திரப் போராட்டத்தில்பலன் அடைந்ததாக அவர் கருதினார்.சுதந்திரம் பெற்ற பின் ஜவஹர்லால் நேரு பார்வையில் சம உடைமை என்ற மக்களுக்கான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் கோட்பாடான சோஷலிசம் மக்களைக் காக்கும் என்ற கருத்து எழுந்தது. ஆனால் மக்களின் வருவாயை உயர்த்த வழி காணும் செயல்கள் அதில் இல்லை.மாறாக தனிப்பட்ட நபர் செல்வாக்கின் அடிப்படையில் செயல்படும் அரசியல் களமாக மாறியது. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர்கள் அல்லது அவர் வாரிசுகள் ஆட்சியில் அமர வழி ஏற்பட்ட காலம் மாறி பல்வேறு ஆதிக்க குழுக்கள் செல்வாக்கு பெற்றன. இது தேர்தல் ஜனநாயகத்தில் காங்கிரஸ் மட்டுமே ஆள முடியும் என்ற கோட்பாட்டை கொண்டு வந்தது.அதிக மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் ஒரு சிலரே தனியாக அல்லது குடும்பமாக செல்வம் சேர்க்க வழி வகுத்தது; நாட்டின் பன்முக வளர்ச்சி தேங்கியது. அந்த நேரத்தில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான பா.ஜ.வின் மூல அமைப்பான ஜனசங்கம் வெறும் இரண்டு எம்.பி.க்கள் என்ற பலத்துடன் தன் அரசியல் பயணத்தைத் துவங்கி அதிக அளவு முயற்சிகளுக்குப் பின் இன்று லோக்சபாவில் பா.ஜ.வாக அபார பலத்துடன் நிற்கிறது.காங்கிரசின் வாரிசு ஆதிக்கம் மற்றும் அதன் தவறான அரசியல் அணுகுமுறையால் அதில் இருந்து விலகிய பலர் மாநிலங்களில் சிறிய கட்சிகள் துவக்கி வலம் வருகின்றனர். மம்தா பானர்ஜி சரத் பவார் ஆகியோர் அந்த பட்டியலில் இன்றும் இருப்பவர்கள்.ஆகவே மத்தியில் கூட்டணி அரசு வந்ததும் இரு ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக காங். தலைமையிலான ஆட்சி நீடித்தது. அதில் முதல் ஐந்தாண்டு மக்கள் எதிர்பார்ப்புகள் அதிகம் என்றாலும் நிர்வாகத் திறன் மங்கியதும் எல்லாத் தரப்பிலும் லஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையானதை மக்கள் உணர்ந்தனர்.அதனால் மாற்றாக பா.ஜ. ஆட்சி வந்தது. அதிலும் இரண்டாம் தடவையாக மோடி தலைமையில் வந்திருக்கும் ஆட்சி மிகப்பெரும் கட்சியான காங்கிரசை எதிர்க்கட்சி வரிசையில் அங்கீகாரத்துடன் உட்கார வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கு காரணம் கூட்டணி ஆட்சியை வழி நடத்திய காங்கிரசின் ஒரே பெரிய தலைவர் சோனியாவின் உற்ற ஆலோசகர்களாக இருந்த அந்தோணி கபில் சிபல் சிதம்பரம் ஆகியோர் தேர்தல் கணக்கை அறியாத தலைவர்களாக இருந்தனர்.அதோடு சோனியாவின் மகன் ராகுல் பெரிய கட்சியை வழிநடத்த தவறிவிட்டார். அதற்கேற்ற ஆளுமையை அவர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்த போது வளர்த்துக் கொள்ளவில்லை. இன்றும் தயங்குகிறார்.முன்பு சீத்தாராம் கேசரி தலைமையை துாக்கி எறிந்து கோல்கட்டாவில் சோனியா ஆதிக்கம் அடைந்த காலம்மாறி இன்று ராகுலை நிலைநாட்ட என்ன செய்வது என்ற கேள்வியுடன்பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.உ.பி.யில் உள்ள கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் தோல்விக்கு காரணம் காட்டும் பிரியங்கா வாத்ரா இனி கட்சியை அடிப்படையில் இருந்து உருவாக்க முன் வரும் பட்சத்தில் அதுவும் ராகுல் முக்கியத்துவத்தை குறைக்கலாம். லோக்சபாவிலும் அக்கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும் நடைமுறை சோனியாவுக்கு மட்டுமே திருப்தி தரலாம்.ஆனால் அது மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் இரு பெரிய கட்சிகள் தங்கள் கொள்கைகளால் ஜனநாயகப் பாதையை சீராக்கும் நடைமுறையை இழந்து விட்டன; தன் செயல்களால் அவை தேய்ந்ததும் இன்றைய அரசியலின் மிக முக்கிய திருப்பம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement