Advertisement

கண்ணான கண்ணே புகைப்பட கண்காட்சி காண வா!

Share

இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கும் சென்னை புகைப்பட கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
செ ன்னையில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா கலா அகாடமியில் கடந்த 19 ந்தேதி துவங்கிய கண்காட்சி நாளையுடன் 25/06/2019 ந்தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த புகைப்பட கண்காட்சியில் 88 புகைப்படக் கலைஞர்களின் 250 தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு படமும் 30க்கு 20 என்ற அளவில் பெரிதாக வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி இலவசம், நேரம் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை.

படங்களை எடுத்த புகைப்பட பிரம்மாக்களில் பலர் தாங்கள் எடுத்த படங்களின் அருகிலேயே இருந்து விளக்கம் தருவதும்,வைல்டுலைப்,பிளாக் அண்ட் ஒயிட்,போர்ட்ரைட் என்று தீம் அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தி இருப்பதும் கண்காட்சியி்ன் கூடுதல் சிறப்பாகும்.
கலைகளிலேயே புகைப்படக்கலையை ரசிப்பதுதான் மிக எளிதாகும். கண்களை மனதையும் மட்டும் திறந்து வைத்துக்கொண்டு கண்காட்சிக்குள் உலாவினால் சந்தோஷம் பொங்க திரும்பலாம்.வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் முடிந்தால் வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் என்று குடும்பத்துடன் சென்று பாருங்கள்



-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement