மணலுக்கு மாற்றாக பழைய கண்ணாடி இருக்க முடியும் என்கின்றனர், ஆஸ்திரேலியாவிலுள்ள டீக்கின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
மனிதன் உற்பத்தி செய்யும் பொருள்களில், கண்ணாடியின் அளவு அதிகம். அதேபோல, ஆரம்பத்திலிருந்தே மறுசுழற்சிக்கு ஏற்ற பொருளாக, கண்ணாடி இருந்து வருகிறது. என்றாலும், கணிசமான கண்ணாடிக் கழிவுகள் மறுசுழற்ச்சிக்கு வராமல் தேங்கிவிடுகின்றன.
அத்தகைய கண்ணாடிகளை, டீக்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கல் பொடி செய்து, மணலுக்கு பதிலாக, பாலிமர் கான்கிரீட்டை பயன்படுத்தி செங்கல் தயாரித்துள்ளனர். ஏற்கனவே, ஈரப்பதத்தை தவிர்ப்பதற்கு கூரைகளில் பாலிமர் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது.
சிமென்ட்டிற்கு மாற்றாக பாலிமர் பிசின்கள் உபயோகிக்கப்படுகின்றன. இத்தோடு மணலைக் கலப்பதற்கு பதிலாக கண்ணாடித் துகள்களை மணல் போல அரைத்து பயன்படுத்தினால் உருவாகும் செங்கல், வழக்கமான செங்கல்லைவிட உறுதியாகவும், உற்பத்தி செலவு குறைவாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பழைய கண்ணாடிகளை சேமித்து, காயலான்கடைகளுக்கு கொடுக்கும் வழக்கம் உலகமெங்கும் இருப்பதால், இந்த புதிய செங்கல் தொழில்நுட்பம் சீக்கிரம், 'ஹிட்' ஆகக்கூடும். மணல் கொள்ளை மாபியாக்கள், பேசாமல், கண்ணாடி பாலிமர் செங்கல் சூளைகளை நிறுவலாமே!
பழைய கண்ணாடியில் மாளிகை கட்டலாம்
வாசகர் கருத்து (1)
நல்ல முறை.. பின்பற்றலாமே?? பாட்டில்களையும், களிமண்ணையும் வைத்து விலை குறைவாக வீடுகள் கட்டுவதை கண்டிருக்கிறோம்.