Advertisement

'மீம்ஸ்' வாயிலாக விவசாயம்!

'லேர்ன் அக்ரிகல்சர்' என்ற, 'மீம்ஸ்' குழுவை சேர்ந்த, ஜி.கே.தினேஷ்:அண்ணாமலை பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படித்த போது, என் வகுப்பு தோழன் சந்தோஷ் வைத்தியநாதனால் தான், இந்த யோசனை வந்தது.

இயற்கை விவசாயத்தில் ஆர்வமான அவன், சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தான். அவன் மூலமாகத்தான் விவசாயத்தை எளிமையாக சொல்லி தருவது போல், இந்த மீம்ஸ் பக்கத்தை ஆரம்பித்தோம்.விவசாயம் மீதான ஆர்வத்தாலும், விவசாய பட்டதாரிகள் என்பதாலும், அதில் உள்ள சின்னச் சின்ன வழிமுறைகள், தொழில்நுட்ப மாற்றங்கள், தவிர்க்க வேண்டிய விஷயங்கள், ரசாயனம், சூழலியல் சார்ந்த பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை கூறுவதே, எங்கள் நோக்கம்.இந்த முயற்சியால், பல விவசாயிகள் எங்களுக்கு போன் செய்து, சந்தேகங்கள் கேட்பர். பெரிய ஏரியாவாக இருந்தால், முதலில் ரசாயன மருந்து அடித்து, பயிரை காக்க சொல்வோம்.

ஏனெனில், அது தான் உடனே பலன் கொடுக்கும். அடுத்தபடியாக, அதற்கு மாற்றும் கூறுவோம். இதுவே, மாடித்தோட்டம், வீட்டு கொல்லப்புற தோட்டம் வைத்திருந்தால், அதற்கு எளிதான இயற்கை முறையை சொல்வோம்.எங்கள் குழுவில், 16 பேர் இருக்கிறோம். பாரம்பரியமாக விவசாயம், அறிவியல்பூர்வமான விவசாயம் என, இரு குழுவாக பிரித்துள்ளோம். விவசாயத்தில் பிரச்னை என்றால், இரு குழுவிடமும் கேட்டு, அதற்கான தீர்வை பரிந்துரைப்போம். பெரும்பாலும் எந்த முறை, அதிக தடவை வெற்றி பெற்றிருக்கிறது என பார்த்து, அதை மக்களிடம் சேர்ப்போம்.

இப்போது, 'உலகமயமாக்கல்' முறையில், அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் விவசாயமும் ஒப்பந்த அடிப்படையில் ஆகிவிடும். அதைவிட முக்கியமான விஷயம், இந்தியாவில், 70 சதவீத மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.இந்த நிலையை சமாளிக்க, இனி வரும் தலைமுறைக்கும், இப்போதுள்ள தலைமுறைக்கும் விவசாயத்தை பற்றிய முக்கியத்துவத்தை எடுத்து கூற வேண்டும்.

அதுமட்டும் தான் மாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தை பாடம் எடுப்பதோ, அறிவுரை கூறுவதோ, சீக்கிரத்தில் அலுப்புத் தட்ட வைக்கும். அதையே ஜாலியாக, குறிப்பு மாதிரி கூறினால், எப்போதும் நினைவில் இருக்கும்.அடுத்தக்கட்டமாக, 'வெப்சைட்' ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. ஏற்கனவே, 'யூ டியூப்'பில், 'வீடியோ' போட்டு வருகிறோம். இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, பணத்தட்டுப்பாடு உள்ளது.

இப்போது அனைவரும் படித்து வருவதால், இன்னும் சில ஆண்டுகளில் ஒரு தொழிலோ, வேலையோ கண்டிப்பாக இருக்கும். அப்போது இதை, அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போவோம்.

தொடர்புக்கு: 84287 19080.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement