Advertisement

புதிய அமைச்சர்கள் தேர்வு :'ரிப்போர்ட் கார்டு' நிச்சயம்

இரண்டாவது ரவுண்டில், அதிக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆவலுடன், பிரதமர் மோடி தம் அமைச்சரவையை அறிவித்து விட்டார். அமைச்சரவையில் அங்கம் வகிப்போர் நிச்சயம், ஆண்டிற்கு ஒரு முறையாவது, 'ரிப்போர்ட் கார்டை' அவரிடம் தர வேண்டி வரும்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமை, குழப்பத்தில் இருப்பதை பிரதிபலிக்கும் விதத்தில், அக்கட்சியின் தகவல் தொடர்பாளர், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு, 'மீடியா'வில் வாய் திறக்க தடை விதிக்கப்பட்டதும், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் நடந்து கொள்வதில் புதுமை. மேலும், இரு கம்யூனிஸ்டுகள், இனியாவது இணைந்து செயல்பட விரும்புவதும், இந்த தேர்தல் படிப்பினை.அப்படி பார்க்கும் போது, அமைச்சரவை நிர்ணயம் செய்வதற்கு முன், பிரதமர் மோடி, காந்தி சமாதி, வாஜ்பாய் சமாதி மற்றும் போர் வீரர் நினைவுச் சின்னம் ஆகியவற்றிற்கு மட்டும் சென்று, தன் அஞ்சலியைத் செலுத்தியிருக்கிறார்.இது, பா.ஜ., கட்சி எப்பாதையை தேர்வு செய்து உள்ளது; அவர்கள், இதுவரை தங்களை, மற்றவர் களிடம் இருந்து வேறுபட்ட அணுகுமுறை கொண்டவர்கள் என்பதை, வெளிப்படையாக்கி விட்டது.


இனி, மதவாத அடிப்படையில், அரசியல் கோட்பாடுகளை, காங்கிரஸ் விமர்சிக்குமா அல்லது தேசிய அணுகுமுறை என்பது முக்கியத்துவம் பெறுமா என்பது, அக்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் அவர் தாய், சோனியா வழிகாட்டுதலில் தெரியும். அக்கட்சியும், கீழ் மட்டத்தில் இருந்து, கட்சித் தேர்தலை நடத்த முன்வருமா என்பதும் அடுத்த கேள்வி.ஒரு பதவியில், இரு முறைக்கு மேல் தொடர்வதை அனுமதிக்காத, பா.ஜ.,வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மோடி பிரதமராக வருவார் என்ற பேச்சும், அதற்கான தரவுகளை பேசி யூகிப்பதும் அர்த்தமற்றது. அவருக்கும் அன்று, 73 வயது ஆகிவிடும்.


அதேபோல், இரு முறை கட்சித் தலைவராக தொடர்ந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவி ஏற்றிருப்பதையும் காணலாம்.ஆனால், இத்தடவை தன் அமைச்சர்களை, மோடி தேர்வு செய்து அறிவிக்க ஏற்பட்ட தாமதம், அரசியல் நோக்கர்களை, பல்வேறு யூகங்களுக்கு தள்ளியது உண்மை.மேலும், மோடியின் பிரதமர் பதவிக் காலத்தில், சிறந்த சட்ட நுணுக்கங்களுடன், பல விஷயங்களில் தன் பதிவுகளின் மூலம், ஆட்சியின் கொள்கைகளை விளக்கிய அருண் ஜெட்லி, நிதியமைச்சர் பதவியை ஏற்க முடியாத சூழ்நிலையை சுட்டிக்காட்டிய வெளிப்படைத் தன்மை, சிறப்பானது.அதேபோல், முந்தைய அரசின் வலுவான அமைச்சர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங், துறை மாறி ராணுவ அமைச்சர் ஆனதால், பிரதமர் அலுவலக உத்தரவுகளுடன், சில முடிவுகளை சிறப்பாக எடுக்கும் தனித் தலைவர் ஆவார்.


ரயில்வே அமைச்சரான, பியுஷ் கோயல் தந்தை, வேதபிரகாஷ் கோயல், வாஜ்பாய் அரசில் அமைச்சர். அத்துடன், கட்சியில் நீண்ட கால பொருளாளர். இது எதற்காக என்றால், ரயில்வே துறை பணிகள் தவிர, வர்த்தகம், தொழில் துறை பியுஷிடம் வந்தது, அவர் சர்வதேச வர்த்தக அணுகுமுறைகளுக்கு ஏற்ப, நம் வர்த்தகக் கொள்கைகளை உருவாக்கும் திறன் கொண்டவர் என, நம்பலாம்.

நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், தமிழகத்தை அடிப்படையாக கொண்டவர் என்பதும், நிதித்துறை குறித்த புரிதல்களை, எளிதாக கையாள்பவர் என்ற நம்பிக்கையை, பிரதமர் கொண்டிருக்கிறார். பிரதமர் அலுவலகத்துடன் இத்துறை நெருக்கம் கொண்டு, சில முக்கிய முடிவு களை எடுக்கும் வேகம் அதிகரிக்க வழி உண்டு.மத்திய பட்ஜெட்டில், வருமான வரிச்சலுகை, சில தொழில்களின் கட்டமைப்புக்கு ஊக்குவிப்பு, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் சரிவைச் சமாளிக்க வழிகள் உட்பட பலவற்றில், அரசின் அணுகுமுறையை, முதல் பெண் அமைச்சரான அவர் தெரிவிக்க நேரிடும்.

இதேபோல், மற்ற அமைச்சர்களில், தர்மேந்திர பிரதான் தொடர்ந்து, பெட்ரோலியத்துறை அமைச்சர் என்பது, பெரிய சவால் நிறைந்த ஒன்று. அவரது பணி, இன்னமும் அதிகரிக்கும்.நிதின் கட்கரி, சாலைப் போக்குவரத்தை அதிகமாக்கிய அனுபவம் கொண்டவர். தன் துறையில் உள்ள பணிகளை முற்றிலும் அறிந்த அவர், நிச்சயம், இந்த அரசின் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில், அதிக முனைப்பு காட்டுவார்.ஒவ்வொரு துறையிலும், அந்தந்த அனுபவங்களை கொண்டிருக்கும் வகையில், தேர்வு செய்யப் பட்டதில், வெளியுறவு அமைச்சராக, ஓய்வு பெற்ற, ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜெய்சங்கர் பணி நியமனம், சீன - இந்திய உறவு நெருடலைக் குறைப்பதுடன், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு போக்கைத் தடுக்க நிச்சயம் உதவிடும்.ஊழலற்ற ஒரு அரசை நிர்வகித்து நடத்த, அதற்கான அமைச்சர்கள் குழு தேர்வை, பிரதமர் மோடி கவனமாக செய்துள்ளார். இது, பார்லிமென்டின் இரு அவைகளும் அர்த்தமுள்ளதாக நடக்க, அதிகம் உதவலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement