Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பேட்டி : அ.தி.மு.க.,விலிருந்து எவரையும், மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல், புறக்கணித்திருப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதன்மூலம், அ.தி.மு.க.,வை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே, கருத வேண்டியிருக்கிறது. மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை, தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை, தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது.


பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி அறிக்கை : சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் விவகாரத்தில், தி.மு.க.,வும், அதன் தலைவர் ஸ்டாலினும், துவக்கம் முதலே, இரட்டை வேடம் போடுகின்றனர். ஆனால், பா.ம.க.,வோ, நானோ அப்படிப்பட்டவர்கள் அல்ல. எட்டு வழிச்சாலை திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, உழவர்களின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்படும் வரை, பா.ம.க., தொடர்ந்து போராடும்.


துாத்துக்குடி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு : ஆளும்கட்சியின் பணபலம், படைபலம் எல்லாவற்றையும் மீறி, ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டே இடைத்தேர்தலில், 13 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. அது, சாதாரண வெற்றியல்ல. விரைவிலேயே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரலாம்; இல்லையெனில், தேர்தல் வரலாம். எதற்கும், தி.மு.க.,வினர் தயாராக இருக்க வேண்டும்.


இந்திய கம்யூ., தமிழக மாநில செயலர், முத்தரசன் பேட்டி : லோக்சபாவில் எங்களின், 37 எம்.பி.,க்கள், தமிழகத்தின் உரிமைக்காக, கடுமையாக போராடுவர். இந்திய அளவில், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவை சீரமைப்பது குறித்து, விரைவில் ஆய்வு செய்வோம்.


தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், ராஜு பேட்டி : தமிழகத்தில், அ.தி.மு.க., சார்பில், ஒரு எம்.பி., தான் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், பிரதமர் பதவி ஏற்பு விழாவில், தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், பிரதமரை முன்மொழியும் கூட்டத்தில், முதல்வரை அழைத்து முன்மொழிய வைத்தது என, தமிழத்தின் பெருமை பாதுகாக்கப்பட்டு தான் உள்ளது. ஜூனில், ராஜ்யசபா, எம்.பி.,க்கள் நியமனம் செய்யப்பட்ட பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.


'மாநில அரசியல் தலைவர்கள், அந்தந்த மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை யாராவது வைத்தால், நீங்க, தமிழக எல்லையைத் தாண்ட முடியாம போயிடும்... பார்த்து பேசுங்க சார்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிக்கை : தமிழக அரசு பணிகளில், பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால், அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தவர்களுக்கு தான் அரசுப் பணி என்பதைப் போல், தமிழக அரசும் சட்டம் இயற்றி, தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில்,
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், 100 சதவீதம் பணி வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

*****************************************
மக்கள் நீதி மையம் கட்சியின் துணை தலைவர், டாக்டர் மகேந்திரன் பேட்டி: கமலுக்கும், ரஜினிக்கும், நல்ல நட்பும், தோழமையும் உண்டு. ஆனால்,

அரசியலைப் பொறுத்தவரை, அவருடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை, காலமும், தலைவரும் தான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணி
விஷயத்தால், எங்கள் தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, கூட்டணி குறித்து, நாங்கள்

அவசரப்பட மாட்டோம்.


பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: காங்., கட்சி, மூடுவிழாவை நோக்கிச் செல்வதால், அதற்கு ஏன் நாம் தலைமை தாங்க வேண்டும் என, ராகுல்

நினைக்கலாம். இந்த லோக்சபா தேர்தலில், தோல்வி என்பது, ராகுலின் திறமையின்மையையே காட்டுகிறது. ஒரே குடும்பத்தை நம்பி வாழ்க்கையை

ஓட்டும் கூட்டம், அக்கட்சியில் நிறைய உண்டு. 'போகாதே போகாதே என் கணவா' என, சோககீதம் வாசிப்பது போல், ராஜினாமா நாடகத்தை நடத்தி,

அனுதாபம் தேட முயற்சிக்கிறார் ராகுல். 'கட்சியிலிருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம்' என்ற, அ.ம.மு.க., பொதுச்செயலர்,

தினகரனின் பேச்சு குறித்து, அக்கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி, புகழேந்தி பேட்டி: அ.ம.மு.க.,வில் பெரும்பாலானோர், எதையும்
எதிர்பார்த்து இருப்பவர்கள் அல்ல. கழகத்திற்காக, உயிரைக் கொடுப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மன வேதனை அடையும் வகையில்,

தினகரனின் பேச்சு அமைந்துள்ளது. கட்சியின் பின்னடைவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை, அவர் ஆய்வு செய்ய வேண்டும்.

அ.ம.மு.க.,வில் இருந்து யாரும் வெளியேறும் சூழல் வரக்கூடாது என்பதே, என் ஆசை.


தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், ராஜு பேட்டி: தமிழகத்தில், அ.தி.மு.க., சார்பில், ஒரு எம்.பி., தான் வெற்றி பெற்று
உள்ளார். இருப்பினும், எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், பிரதமர் பதவி ஏற்பு விழாவில், தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர்

கலந்து கொண்டனர். அதேபோல், பிரதமரை முன்மொழியும் கூட்டத்தில், முதல்வரை அழைத்து முன்மொழிய வைத்தது என,
தமிழகத்தின் பெருமை பாதுகாக்கப்பட்டு தான் உள்ளது.

'மிகச் சரியாகச் சொன்னீர்கள்...' எனப் பாராட்டத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி:
பா.ஜ.,வை வீழ்த்துவதற்கு, தனிப்பட்ட முறையில் காங்கிரசுக்கு உள்ள வலிமை போதாது என்பதை, காங்., உணர மறுக்கிறது. பா.ஜ.,வை எதிர்க்கக்கூடிய

அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒரு மெகா கூட்டணியை, அவர்கள் உருவாக்கி இருக்க வேண்டும். அதற்கான முயற்சியை, காங்.,

எந்த அளவுக்கு முனைப்புடன் மேற்கொண்டது என, எனக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு இல்லாதது தான், பா.ஜ.,வின்

வெற்றிக்குக் காரணம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்போ உங்க அகராதிப்படி மணிசங்கர் அய்யர் மட்டும் தமிழரா ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement