Advertisement

உடை வடிவில் வரப்போகுது ஜில், 'ஏசி!'

ஓரிருவர் உள்ள பெரிய அறையில், வெப்பத்தை தணிக்க, 'ஏசி'யைப் போட்டால் நிறைய மின்சாரம் விரயமாகும். அதற்குப் பதில், ஒருவர் உள்ளாடை போல அணிந்துகொள்ளக்கூடிய குளிரூட்டும் உடை இருந்தால் எப்படியிருக்கும்?
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதைத்தான் தயாரித்திருக்கின்றனர். 'சயன்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகியிருக்கும் அவர்களது கண்டுபிடிப்பு, ஓர் எளிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
சிறிய கைப்பட்டை போல ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள கருவி, பிஸ்மத் டெலுரைட் பட்டை மற்றும் தாமிர பட்டை ஆகியவை உள்ளன. இதை அணிந்து கொள்பவரின் உடலின் வெப்பத்திற்கும், அறையில் நிலவும் வெப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டால், மிகக்குறைவான அளவு மின்சாரம் ஒரு பட்டையிலிருந்து இன்னொன்றுக்குக் கடத்தப்படுகிறது.
இந்த மின்கடத்தலால் வெப்பம் உண்டாகிறது. குளிர் காலத்தில் வெப்பம் வேண்டுவோருக்கு இது மிகவும் உதவும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சி வேண்டும் என்றால், மின்சாரம் செல்லும் திசையை உல்டா செய்தால், தோலின் மேல் குளிர்ச்சி படும்படி செய்ய முடியும். ஒரு வளைந்துகொடுக்கும் மின்கலன் பட்டையும் இந்தக் கருவியில் உள்ளது.
இது மின்சாரம் செல்லும் திசை, வெப்பம் அல்லது குளிரின் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சர்க்யூட்டை இயக்குகிறது. விரைவில் ஒரு முழு உடையை தயாரிக்கும் வேலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மும்முரமாகியுள்ளனர். இந்தக் கருவிக்கு அதிகபட்சம் ஒரு நாளைக்கு, 80 வாட்டுகள் மின்சாரம் மட்டுமே தேவைப்படும்.
இதுவே ஏசியை இயக்கினால் பல நுாறு வாட்டுகள் மின்சாரம் வியமாகும். சீக்கிரம் ஏசி உடையை பேஷனாக்குங்க விஞ்ஞானிகளே!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement