Advertisement

ஒரே நாளில் வீடு கட்டும் இயந்திரம்!

Share

வெறும், 24 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டை கட்டி முடிக்க முடியுமா? முடியும். முப்பரிமாண அச்சியந்திரம் இருந்தால். சீனா, ஜெர்மனி, சவுதி போன்ற பல நாடுகளில் வீடு, அலுவலகம், வர்த்தக வளாகம் போன்றவற்றை பெரிய முப்பரிமாண அச்சியந்திரங்கள் மூலம் பரிசோதனை முறையில் கட்டி அசத்தியருக்கின்றனர் பொறியாளர்கள்.
அதன் தொடர்ச்சியாக, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றில், விரைவில் பல வீடுகள் அடங்கிய ஒரு குடியிருப்பையே முப்பரிமாண அச்சு முறையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நியூ ஸ்டோரி என்ற லாப நோக்கற்ற அமைப்பு, பியூஸ் புராஜக்ட் என்ற வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஐகான் என்ற கட்டுமான நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த திட்டம்.
மாதம், 14 ஆயிரம் ரூபாய் வருவாய் உள்ள எளிய குடும்பங்களுக்கு, 350 சதுர அடியில் வீடுகளை கட்டுவது தான் திட்டம். இதற்கு ஐகான் நிறுவனத்தின், வல்கன் 2 என்ற கட்டடங்களுக்கான முப்பரிமாண அச்சியந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.
முப்பரிமாண இயந்திரம் காங்கிரீட் கலவையை, ஒரு குழாய் வழியாக, மென்பொருள் வழிகாட்டும் வடிவத்தில் ஊற்றுகிறது. கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கு இடைவெளி விட்டு, வீட்டின் சுவர்களை, 24 மணி நேரத்திற்குள், வல்கன் 2 இயந்திரம் கட்டி முடித்துவிடுகிறது. பின் பணியாளர்கள் வந்து ஜன்னல், கதவுகளை மாட்டிவிட, வீடு குடியேறுவதற்குத் தயாராகி விடுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    We write about 3D printed houses and construction projects all the time, but of the companies developing house-building 3D printers, most have one thing in common: profit. 3D printing is a profi business, and any company that claims to be able to 3D print a skyscraper or such like is sure to attract both interest and investment. Based in Silicon Valley, New Story would appear to be one of those companies—this area of California is, after all, somewhat flush with capital. But 3D printing specialist New Story is actually a nonprofit, and is attempting to use its new Vulcan 3D printer to print houses in areas affected by natural disasters. The nonprofit has spent the last few years developing 3D printing technology fit for developing safe houses for those in poverty. To do this, it worked with construction tech company Icon, together honing the Vulcan 3D printer into a machine that can fabricate a four-room house in less than a day. Sounds impressive, but does it work? You'll have to ask attendees of SXSW for the final verdict, but New Story says it has already completed a 3D printed structure at the Icon premises, and will print test homes in El Salvador later this year. New Story says its Vulcan 3D printer, which will probably cost less than $100,000, is set on tracks and can be packed up into a truck, making it fully transpor. Its large nozzle deposits mortar in layers. The huge 3D printer is purportedly capable of 3D printing houses between 600 and 800 square feet with two bedrooms, a kitchen, and a bathroom. The roof of these buildings, however, cannot be 3D printed. Between two and four workers are required to operate the 3D printer and put these super-cheap houses (they cost just $4,000 each) together. The organization relies on donations for its R&D and operations, and sees itself as the future R&D arm of the global social housing sector. From what we can see, the example 3D printed home looks pretty cool, but the absence of detailed photos and info about the 3D printer has us remaining calm for the moment.

  • Jacintha - Salem,இந்தியா

    டீடெயில்ஸ் சென்ட் பண்ணுங்க....

  • T.S.SUDARSAN - Chennai,இந்தியா

    pl send me the details

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement