Advertisement

நீளும் ரயிலின் மூக்கு!

Share

அதிவேக ரயில்களை பரிசோதிப்பதில் ஜப்பான் முன்னணி வகிக்கிறது. 'ஷிங்கான்சென்' எனப்படும் அதிவேக ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, முன் இயந்திரப் பகுதியை மீன்கொத்திப் பறவையின் அலகு அமைப்பை பின்பற்றி, 1997ல் ஒரு புல்லட் ரயில் அறிமுகமானது.
தற்போது, மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, இயந்திரப் பகுதியின் மூக்கை, 16 மீட்டர் மற்றும் 22 மீட்டர் நீளத்திற்கு வடிவமைத்து, இரண்டையும் சோதித்து வருகிறது ஜப்பான்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இரவு நேரங்களில் சோதனை ஓட்டத்தை நடத்தி, 2030ம் ஆண்டு புதிய வடிவ ரயில்களை ஜப்பான் அறிமுகப்படுத்தவுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement