dinamalar telegram
Advertisement

இதுக்குமா, 'லீகல் அட்வைசர்?'

Share

இதுக்குமா, 'லீகல் அட்வைசர்?'
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட, 'பிளாஸ்டிக்' பொருட்கள் சோதனையில், அதிகாரிகள் ஈடுபட்டனர்.சில வணிக வளாகங்களில், அதிகளவில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அக்கடையின் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதித்தனர்.இதனால், அதிகாரிகள் மீது கோபப்பட்ட கடைக்காரர்கள், 'இருங்க... எங்க, 'லீகல் அட்வைசரை' கூப்பிட்டு இருக்கோம். அவர் முன்னாடி, பறிமுதல் நடவடிக்கையை தொடருங்க' என்றனர்.'அரசால் தடை செய்யப்பட்ட பொருளை வச்சிருக்கிறதே, சட்டப்படி தப்பு; அதை நியாயப்படுத்த, சட்ட ஆலோசகரை வேற வச்சுருக்காங்களே... என்ன கொடுமை சார் இது...' என, பேரூராட்சி அலுவலர்கள், தலையில் அடித்துக் கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement