Advertisement

அந்த குப்புசாமி யார் தெரியுமா?

ஒரு ஊரில் ஒரு தொழில் அதிபர் இருந்தார்.

அவருக் nsmimg691929nsmimg கு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு வேலை நடக்கவேண்டியிருந்தது.நடை நடையாய் நடந்தும் அந்த வேலை நடக்கவில்லை.கவலையுடன் கலெக்டர் அலுவலக வாசலில் வழக்கம் போல ஒரு நாள் அமர்ந்திருந்தார்.

nsmimg691930nsmimg

அப்போது அவரிடம் நான் தான் குப்புசாமி என்று ஒருவர் அறிமுகம் செய்துகொண்டார், பிறகு என்ன வேலையாக காத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

‛நான் ஒரு தொழில் அதிபர், பலரை தெரியும் இருந்தும் இந்த வேலை நடக்கவில்லை உங்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது' என்று சலித்துக்கொண்டார்.

‛கொஞ்சம் பொறுங்கள்' என்று சொல்லிவிட்டு ஒரு துண்டுச்சீட்டில் ‛நான் குப்புசாமி வந்திருக்கிறேன்' என்று எழுதி கலெக்டருக்கு கொடுத்துவிட்டார் அடுத்த சில நிமிடங்களில் ‛வாங்க குப்புசாமி எப்படி இருக்கிறீங்க' என்று கேட்டபடி கலெக்டரே வெளியே வந்துவிட்டார்.

கலெக்டரிடம் தொழில் அதிபரை அறிமுகம் செய்துவிட்டு ஒரு வேலையாக ரொம்ப நாள் அலைகிறார் என்று சொல்லியிருக்கிறார் என்ன ஏது என்று கேட்டு உடனே அந்த வேலையை கலெக்டர் முடித்துக்கொடுத்தார்.

தொழில் அதிபருக்கு நம்பவே முடியவில்லை ரொம்ப சந்தோஷத்துடன் குப்புசாமியை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார்.

கொஞ்ச நாள் கழித்து அழைப்பை ஏற்று குப்புசாமி விருந்திற்கு சென்றார்.பிரமாதமான விருந்து கொடுத்தாலும் தொழில் அதிபர் முகத்தில் ஒரு வருத்தம் இருப்பதை உணர்ந்த குப்புசாமி என்ன என்று விசாரித்தார்.

அது ஓண்ணுமில்லை டில்லியில் நிதி அமைச்சரிடம் ஒரு பைல் இருக்கு நகரவே மாட்டேன் என்கிறது அதுதான் ஒரே கவலையாக இருக்கிறது என்றார்

அவ்வளவுதானே டில்லிக்கு டிக்கெட் போடுங்கள் நாளைக்கே விஷயத்தை முடிச்சிடலாம் என்று சொல்லியிருக்கிறார்.

விமானத்தில் போகும் போது ஏதோ கலெக்டர் உள்ளூர் அதிகாரி விஷயம் முடிஞ்சுது அதை நம்பி டில்லி நிதி அமைச்சரிடம் இவரை கூப்பிட்டுக்கிட்டு போகிறேமே சரிதானா? என தொழிலதிபர் சந்தேகத்துடனேயே பயணப்பட்டார்.

டில்லியில் நிதி அமைச்சர் அலுவலகம், ஒரே கூட்டம் ‛நான் குப்புசாமி வந்திருக்கேன்' என்று துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டார் சிறிது நேரத்தில் அந்த துண்டு சீட்டு மட்டும் திரும்பி வந்தது. தொழிலதிபர் கேவலமாக குப்புசாமியை பார்த்தார்.குப்புசாமியோ ‛பொறுங்க ஒரு தப்பு நடந்துவிட்டது' என்று சொல்லி அதே துண்டுச்சீட்டில் நான் குப்புசாமி வந்திருக்கேன் என்று சொல்லி ‛இந்தியில்' எழுதி அனுப்பினார்.

அடுத்த சில நிமிடங்களி்ல் ‛ஆவோ குப்பு ஆவோ' என்றபடி நிதி அமைச்சர் வெளியே வந்து குப்புசாமியை கட்டிப்பிடித்துக் கொண்டார், பிறகென்ன தொழிலதிபர் போன வேலை சுபமாக முடிந்தது.

சந்தோஷத்தில் மிதந்த தொழிலதிபர் குப்புசாமியை உலக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.

கடைசியாக வாடிகன் சிட்டிக்கு போயிருந்த போது போப் ஆண்டவரைக்காண அவரது மாளிகைக்கு வெளியே லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு இருந்தனர்.

அவர்களில் நம்ம தொழிலதிபரும் குப்புசாமியும் உண்டு.

அப்போது குப்புசாமி எதற்கு வெளியே காத்திருக்கணும் மாளிகைக்கு உள்ளேயே போய் அவரைப்பார்க்கலாமே என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு தொழிலதிபர் ‛விளயைாடதீங்க குப்புசாமி இது சென்னையோ டில்லியோ அல்ல வாடிகன் இ்ங்கேயெல்லாம் உங்க பருப்பு வேகாது பேசாம இருங்க' என்று சொல்லியிருக்கிறார்.

நீங்க பேசாம இருங்க என்று பதிலுக்கு சொன்ன குப்புசாமி விறுவிறு வென்று கூட்டத்திற்குள் புகுந்து மாளிகைக்குள் சென்றார்.

கொஞ்ச நேரம் கழித்து மாளிகையின் பால்கனியில் போப்புடன் குப்புசாமியும் வெளியே வந்து நின்றார். நம்பமுடியாமல் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபரின் பக்கத்தில் நின்றிருந்த ஒரு வெளிநாட்டு பயணி குப்புசாமியின் காதில் ஏதோ சொல்ல, அதைக்கேட்ட தொழிலதிபர் மயங்கிவிழுந்துவிட்டார்.

இந்தக்காட்சியை பால்கணியில் இருந்து பார்த்த குப்புசாமி உடனே ஒடோடிவந்து தொழிலதிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தீர்த்து எழுப்பி உட்காரவைத்தார்.

என்னாச்சு உங்களுக்கு ஏன் மயங்கிவிழுந்திட்டீங்க என்று கேட்ட குப்புசாமியிடம் என்கிட்ட ஒரு ஆள் கேட்ட கேள்வியை என்னால தாங்கிக்கமுடியல அதான் மயங்கிவிழுந்துட்டேன் என்றார்.

அப்படி என்னதான் அவர் கேட்டார் என்றதற்கு ‛நீ்ங்களும் போப்பும் மாடியில வந்து நின்னீங்களா, அப்ப என் பக்கத்துல இருந்த வெளிநாட்டு பயணி, எனக்கு குப்புசாமி நிக்கிறது தெரியறது ஆனால அவரு பக்கத்துல நிக்கிறாரே அவுரு யாருன்னு? கேட்டார் அதைத்தான் தாங்க முடியாம மயங்கிவிழுந்துட்டேன்' என்றார்.

இது ஒரு நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை

சொன்னவர் பாலாஜி வித்யாஸ்ரமம் பள்ளி தாளாளரும் பேச்சாளருமான அரிமா பாலமுருகன் ஆவார்.

இந்தக் கதையைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை திநகரில் உள்ள நகைச்சுவை மன்றத்தின் மாதந்திர கூட்டம்.

பார்வையாளர்கள் வந்துவிட்டனர் ஆனால் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று யாரும் வரவில்லை மன்றத்தின் நிறுவனராக அரிமா சேகர் எல்லா பொறுப்பையும் அவர் ஒருவரே எடுத்துக்கொண்டு கூட்டத்தை திறம்பட நடத்திச் சென்றார்.

இதை எல்லாம் கவனித்தபடி தாமதமாக வந்து மேடையேறிய சிறப்பு விருந்தினரான பாலமுருகன் தனது தாமதத்திற்கு நியாயம் சேர்த்துவிட்டு பின் இ்ந்தக்கதையை சொல்லி தனது பேச்சைத் துவக்கினார்.

இந்தக்கதையில் வரும் குப்புசாமி வேறு யாருமல்ல இந்த மன்றத்தின் நிறுவனத்தலைவரான சேகர்தான் அந்த குப்புசாமி.சேகருக்கு தெரியாதவர்கள் யாரும் கிடையாது தெரியாத வித்தையும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துவிட்டார் என்று சொன்னபோது மன்றத்தில் பலத்த கைதட்டல்.

தொடர்ந்து நிறைய ஜோக்குகள் மன்றத்தில் சொல்லப்பட்டது.முன்னாள் தாசில்தார் இளங்கோவன் முதல் உதவி சிகிச்சை வழங்குவது எப்படி என்பதை படங்களுடன் விளக்கியது உபயோகமாக இருந்தது. நிறைவாக கிருஷ்ணா ஸ்வீ்ட்ஸ் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.

மாதத்தி்ன் ஒவ்வொரு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த நகைச்சுவை மன்றக்கூட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் நகைச்சுவை சொல்லலாம் சந்தோஷமாக செல்லலாம் மேலும் விவரத்திற்கு சேகரைத் தொடர்பு கொள்ளவும் எண்:97907 75571.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ananthan.iyer - mumbai,இந்தியா

    லஞ்சம் கொடுக்காமல் கலெக்டர் ஆஃபிஸில் அதுவும் தமிழ் நாட்டில் காரியம் சாதித்தார்கள் என்றால் செத்த பிணமும்கூட சத்தமா சிரிக்கும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எந்த குப்புசாமியாகஇருந்தாலும் போப்பிடம் கூட காரியத்தை சாதிக்கலாம் ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் காசுகொடுக்காமல் ஒன்னும் செய்யமுடியாது எனவே இந்த கதை முழுக்க பொய்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இது பழைய ஜோக், வாட்சப்பில் பலமுறை பார்த்தாகிவிட்டது. என்னையா நீங்க..

  • mohan - CHENNAI,இந்தியா

    வாழ்த்துக்கள் சேகர் சார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement