Advertisement

அவமதிச்சுட்டாங்களே!

அவமதிச்சுட்டாங்களே!


'ஏதாவது வித்தியாசமாக செய்து, கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்தால், எதிர்பாராதவிதமாக இப்படி நடந்து விட்டதே...' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சிவ்ராஜ் சிங் சவுகான் புலம்புகிறார்.ம.பி.,யில் தற்போது, முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீப காலமாக, கடுமையான மின் வெட்டு நிலவுகிறது. இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும், அரிக்கேன் விளக்குடன், நடைபயணம் மேற்கொள்கிறார், சவுகான்.ஆட்சி பறிபோய் விட்ட நிலையில், இப்படி வித்தியாசமான போராட்டங்களை நடத்தியாவது, கட்சி மேலிடத்தின் பாராட்டுகளை பெற வேண்டும் என்பதே, சவுகானின் நோக்கம்.ஆனால், பீஹார் முன்னாள் முதல்வரான, லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, தேஜஸ்வி யாதவ், அரிக்கேன் விளக்குடன், சவுகான் இருக்கும் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.அதில், 'பா.ஜ., தலைவர்கள், லோக்சபா தேர்தல் முடிவு வருவதற்கு முன், எங்கள் கட்சிக்கு வரத் துவங்கி விட்டனர்' என்றும் பதிவிட்டுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னம், அரிக்கேன் விளக்கு என்பதால் தான், இப்படி பதிவிட்டார், தேஜஸ்வி.இதை சற்றும் எதிர்பார்க்காத சவுகான், 'இந்த காலத்து பசங்க, ரொம்ப மோசம்பா... ஒரு மூத்த அரசியல் தலைவர் என்றும் பாராமல், என்னை இப்படி அவமதிச்சுட்டாங்களே' என, முணுமுணுக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement