Advertisement

நல்லதொரு குடும்பம்!

'இந்த வயதிலும், இந்த அம்மாவுக்கு, அரசியலில் எவ்வளவு ஆர்வம் பாருங்களேன்' என, டில்லி முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, ஷீலா தீட்சித் பற்றி, எதிர்க்கட்சியினரே, ஆச்சர்யத்துடன் பேசுகின்றனர். ஷீலாவுக்கு, 81 வயதாகி விட்டது. டில்லி முதல்வர்களிலேயே, அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் இவர் தான். ஆம் ஆத்மி எழுச்சிக்குப் பின், டில்லியில், ஷீலாவுக்கு செல்வாக்கு போய் விட்டது. இதனால், கேரள மாநில கவர்னராக, முந்தைய, காங்., அரசால் நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே, பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்ததால், கவர்னர் பதவி பறிபோய் விட்டது. 'அரசியலே வேண்டாம்' என, வீட்டில் ஓய்வெடுத்து வந்தவரை, காங்., மேலிடம் விடவில்லை. தற்போதைய லோக்சபா தேர்தலில், டில்லி வட கிழக்கு தொகுதியில், வேட்பாளராக அறிவித்து விட்டது.

ஷீலா தீட்சித், கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை. தனக்காக, தன் குடும்பத்தில் உள்ள எல்லாரையும், பிரசாரத்திற்கு இழுத்து வந்து விட்டார். இவரது மகன் சந்தீப், பிரசார பொறுப்பு முழுவதையும் கவனித்தார். தன் தாய் ஷீலா, பிரசாரத்துக்கு செல்லும்போதெல்லாம், உடன் சென்று, அவரது உடல் நலனை கவனித்தார், மகள் லதிகா. இதுபோல், ஷீலாவின் உறவினர்கள் அனைவரும், ஆளுக்கொரு பொறுப்பை ஏற்று, பிரசாரத்தை, 'கலக்கி' விட்டனர்.

'இந்தக் காலத்தில், இப்படிப்பட்ட நல்லதொரு ஒற்றுமையான குடும்பத்தை யாரும் பார்க்க முடியாது' என, மூக்கில் விரல் வைக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement