Advertisement

அறிவியல் ஆயிரம் : மீன்கள் கிடைக்குமா

உலகில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் மாசுபாடு, கடலில் வாழும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடல்வாழ் பாக்டீரியாக்கள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவில், 10 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. மேலும் பிளாஸ்டிக் மாசுபாட்டால், உலகில் கடல்வாழ் உயிரினங்களுக்கு, 9,143 கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுதோறும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிப்பதால் 2050ல் மீன் வளம் வெகுவாக குறையும்.

தகவல் சுரங்கம் : உலகின் முதல் பெண்



'லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' என்ற 'சினஸ் 912' விமானம் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்த உலகின் முதல் பெண்மணி என்ற சாதனையை இந்திய பைலட் ஆரோஹி பண்டிட் பெற்றுள்ளார். 23 வயதான இவர், மும்பையை சேர்ந்தவர். பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் புறப்பட்ட இவர், 3 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்து, கனடாவில் தரையிறங்கினார். இடையில் கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் தரையிறங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். கனடாவில் இருந்து பின் ரஷ்யாவுக்கு பறந்து சென்றார். 2019 ஜூலை 30க்குள் 37 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement