Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம் : இரண்டாவது இடம்

உலகில் ஆல்கஹால் பயன்பாட்டில் இந்தியா ௨வது இடத்தை பெற்றுள்ளது என பிரிட்டனின் லான்செட் மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது. இது 2010 முதல் 2017 வரை உலகின் பல்வேறு நாடுகளில் ஆல்கஹால் பயன்படுத்து குறித்து ஆய்வு நடத்தியது. உலகில் 2010ல் 201 கோடி லிட்டராக இருந்த ஆல்கஹால் பயன்பாடு, 2017ல் 3570 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. 2030ல் தனி நபரின் ஆண்டு சராசரி ஆல்கஹால் அளவு 7.6 லிட்டராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் முதலிடத்தில் வியட்நாம் உள்ளது. இங்கு 2017ல் தனிநபர் சராசரி அளவு 8.9 லிட்டராக உள்ளது.

தகவல் சுரங்கம் : சர்வதேச குடும்ப தினம்



வாழ்வாதாரத்திற்காக சொந்த இடத்தை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல குடும்பங்களில், உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பதே அரிதாக உள்ளது. இதனால் குடும்ப கட்டமைப்பிலும் 'விரிசல்' உருவாகிறது. அனைவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 15ல் சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், தனது குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement