Advertisement

அந்தக் கடைசி மீனும் பிடிபட்டுவிட்டது?

எங்கும் கோடை வாட்டி எடுக்கிறது

நீர் நிலைகள் வற்றிப்போய் நிலங்கள் பாளம் பாளமாக வறண்டு கிடக்கிறது

நீர் வாழ்வனவும், நீரை நம்பி வாழ்பவனவும் செய்வதறியாது திணறுகின்றன.
சென்னையில் கடந்த மாதம் வரை பார்வையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் விருந்தாக இருந்த பள்ளிக்கரணை நீர் நிலை வரலாறு காணாத அளவில் வற்றிப்போய்விட்டது.
பறவைகளுக்கு சிக்காமல் நீந்தி வந்த மீன்கள் எல்லாம் இப்போது நீந்த இடமில்லாமல் அனைத்துமே பறவைகளுக்கு உணவாகிவிட்டது.
நாம் போயிருந்த போது ஒரு ‛கூழைகடா' (பெலிகன்) பறவை ரொம்பவும் சிரமம் இல்லாமல் ஒரு பெரிய மீனை பிடித்து கொண்டிருந்தது.
அநேகமாக அதுதான் அந்த நீர்நிலையில் இருந்த கடைசி மீனாக இருக்கலாம்...

-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement