Advertisement

ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்!

ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்!

மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கான காரணம் குறித்து கூறும், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், சங்கர்: கோடையில் வெப்பக்காற்றை சுவாசிக்கும்போது, மூக்கின் உள்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, துாசு மற்றும் அழுக்குகள் அதிகளவில் சேர்ந்துவிடும். சிலர், அதை விரலால் வெளியே எடுக்க முயல்வர். அப்படிச் செய்யும்போது, மூக்கின் உள்பகுதியில், விரல் நகம் கீற வாய்ப்பிருக்கிறது.அதிக அழுத்தம் கொடுத்து, அழுக்கை வெளியே எடுக்கும்போது, ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டும், ரத்தக்கசிவு ஏற்படலாம். உடலில் சூடு அதிகரித்தாலும், மூக்கிலிருந்து ரத்தம் வரலாம்.சிலருக்கு, மூக்கின் அமைப்பில் தண்டுவடம் மட்டும் வளைந்து காணப்படும். அவர்களால் மூக்கின் ஒரு பக்கம் மட்டுமே முழுமையாக சுவாசிக்க முடியும். இன்னொரு பக்கம் அடைப்பு ஏற்பட்டு, சுவாசம் தடைபடும். அந்தப் பக்கத்தில் செல்லும் குறைந்த அளவு சுவாசமும், வெப்பக்காற்றாக இருந்தால், ரத்தக் குழாய்கள் சேதமடைந்து ரத்தம் வரத் துவங்கும்.மூக்கில் ரத்தம் வரும் பிரச்னை உள்ளவர்கள், நேரடியாக வெயிலில் நடப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். வெப்பக்காற்று நிரம்பியிருக்கும் அறைகளில், நீண்ட நேரம் இருக்கக் கூடாது. நீர்ச்சத்துள்ள உணவுகளை, அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.மூக்கில் எந்தப் பக்கம் ரத்தம் வருகிறதோ, அந்தப் பகுதியின் வெளிப்புறத்தை, இரண்டு நிமிடங்களுக்கு, விரல்களால் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

சில நிமிடங்களில், ரத்தக் கசிவு நின்று விடும். ஐஸ் கட்டிகளை, சுத்தமான துணியில் வைத்துக் கட்டி, ரத்தம் வரும் இடத்துக்கு வெளியில், மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, அந்த பகுதியை சுற்றியுள்ள ரத்த நாளங்கள், சுருங்கத் துவங்கும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு, ரத்தக்கசிவு நின்றுவிடும். --பத்து நிமிடங்களுக்கும் மேல் ரத்தம் தொடர்ந்து கசிந்து கொண்டிருந்தால், தாமதிக்காமல், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.ரத்தக்கசிவு, எல்லா நேரங்களிலும், வெப்பம் காரணமாகவே ஏற்படும் என, உறுதியாகச் சொல்ல முடியாது. ஓரிரு தினங்கள் தொடர்ந்து ரத்தக்கசிவு இருந்தால், மருத்துவரை அணுகி, 'எண்டோஸ்கோபி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Darmavan - Chennai,இந்தியா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement