Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தனிப்பட்ட முறையில, மோடி மீது ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜிவாலா பேட்டி: இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்தவர்; இந்தியாவில், வேலை வாய்ப்பை அழித்தவர்; விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய, வெற்றி பெறாத அரசியல்வாதி, அக்ஷய்குமாரை விட தற்போது, சிறந்த நடிகராக முயற்சிக்கிறார். மே 23ல், மக்களால் நிராகரிக்கப்பட உள்ள, தோல்வியடையும் அரசியல்வாதி, பாலிவுட்டில் மாற்று வேலை தேடுகிறார். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மோடியைப் போன்று தோல்வியடையும் அரசியல்வாதி, பாலிவுட்டில் வெற்றி பெற்ற நடிகராகலாம்.


தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி பேட்டி: மத்திய அமைச்சரவையில், பா.ம.க., அங்கம் வகித்தபோது தான், திண்டிவனம் - செஞ்சி வழியாக, திருவண்ணாமலைக்கு, ரயில் பாதை கொண்டு வரப்பட்டது. அப்போது, விவசாய நிலங்கள் மீது காட்டாத அக்கறையை, இப்போது ராமதாஸ் காட்டுவது, வேடிக்கையாக உள்ளது. எந்தவொரு திட்டத்தையும், மக்களின் ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும் என்பதே, காங்கிரசின் நிலைப்பாடு.


பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி அறிக்கை: சென்னையிலிருந்து சேலத்திற்கு, இரு தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது, 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, புதிதாக எட்டு வழிச்சாலை எதற்கு என்பதற்கு, தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி விளக்கம் அளிக்க வேண்டும். உரிய இழப்பீடு கிடைத்தால் நிலம் வழங்க, விவசாயிகள் தயாராக இருப்பதாக, அவர் கூறுகிறார். இதன் மூலம், அதிக பணத்திற்குத் தான், விவசாயிகள் போராடுகின்றனர் என, அவர்களின் போராட்டத்தை, கொச்சைப்படுத்தி உள்ளனர். இதை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, 'டுவிட்டரில்' கருத்து பதிவு: மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வரும், பா.ஜ., அரசுகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை, முற்றிலும் புறக்கணித்து விட்டன. இதுவரை, பா.ஜ., அரசுகள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எத்தனை அரசுப் பணியிடங்களை பூர்த்தி செய்தது என்பதை, நிரூபிக்க இயலுமா? இது தொடர்பாக, பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்.


காங்., மூத்த தலைவர், ஏ.கே.அந்தோணி பேட்டி: கேரளாவில், மோடி மற்றும் பினராயி விஜயன் மீதான எதிர்ப்பு அலை தான், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணம். வயநாட்டில், காங்., தலைவர், ராகுல் போட்டியிட்டதும், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement