ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் ஒனுகுதெல்லி கிராமத்தில் உள்ள போன்டா இன பழங்குடியினரை சமீபத்தில் படம் எடுத்து திரும்பியுள்ளார்.
ேஹாண்டு,சவுரஸ்,சான்டிராஸ்,பூமியாஸ்,ஆரான்ஸ்,கோயாஸ்,பரஜாஸ்,
கட்வா என்று அங்குள்ள பழங்குடியினத்தவர்களில் போன்டா இனத்தவரும் ஒரு பகுதியினர்.
இவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில்தான் வசிக்கின்றனர்.இன்னமும் பழமை மாறாமல் இருக்கின்றனர்.ஆண்களும் சரி பெண்களும் சரி ஆடைகளைவிட ஆபரணங்களையே அதிகம் அணிந்து காணப்படுகின்றனர்.பெண்கள் கழுத்தில் கையில் உடம்பில் என்று பல இடங்களில் உலோக வளையங்களை ஆபரணமாக அணிந்துள்ளனர் விலங்குகளிடம் இருந்து இந்த ஆபரணங்கள் தங்களை காக்கும் என்பது இவர்களது நம்பிக்கை.
நமது பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றம் மலைவாழ் மக்கள் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று தற்போது செல்போன்,டி.வி.,நவீன உடைகளுக்கு மாறிவிட்டனர் ஆனால் இவர்கள் தொன்று தொட்டு இன்றைக்கும் அப்படியேதான் இயற்கையை தெய்வமாகக் கொண்டு வாழ்கின்றனர்.
வாரச்சந்தை நடைபெறும் வியாழக்கிழமை மட்டும் மலையில் இருந்து இறங்கிவந்து தாங்கள் வைத்துள்ள தேன் மற்றும் மலைப்பயிர்களைக் கொடுத்துவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்கின்றனர்.இந்தச் சந்தைதான் இவர்களுக்கு உலகத்தோடு உள்ள ஒரே தொடர்பு.
இன்னமும் இவர்கள் கல்வி,செல்வம்,நாகரீகம் எனும் அறியாமை இருளில் இருக்கிறார்களே என வருத்தப்படுவதா?
அல்லது கள்ளம், கபடு, சூது, வன்மம் எனும் இன்றைய சராசரி மனிதர்களின் ‛ஆற்றல்' இல்லாமல் அமைதியாக, ஆனந்தமாக, இயற்கையாக, இனிமையாக இருக்கிறார்கள்,அவர்களை ஏன் கெடுப்பானேன் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று சந்தோஷப்படுவதா?
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
இந்த மனிதர்கள் தான் வாழும் தெய்வங்கள்