Advertisement

அடுக்கடுக்கான தகவல்கள்... ஏராளமான புதிர்கள்!

தமிழகத்தில், தேர்தல் அதிக மோதல் இன்றி, முடிந்திருக்கிறது. வேலுார் தவிர, 38 தொகுதிகள், புதுச்சேரி உட்பட லோக்சபா முடிவுகள் வெளியாக காத்திருப்பதற்குள், நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தை விட, இத்தேர்தல் நடந்த, 40 நாளில் நாடு முழுவதும் நடந்த அதிரடி வரிச் சோதனைகள் அதிகம். ஆனால், இத்தடவை, தமிழகத்தில் வரித்துறையின் பணம் பறிமுதல், 515 கோடி ரூபாய்; தங்கம், வெள்ளி என பிடிபட்டவையின் மொத்த மதிப்பு, 250 கோடி ரூபாயாகும். ஆனால், பணம் பறிமுதலில், குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தவிர, பணம் பறிமுதல் காரணமாக, வேலுாரில் தேர்தல் ரத்தாகி இருக்கிறது என்பது சற்று நெருடலாகும். தவிரவும், முதல்வர், இ.பி.எஸ்., தலைமை அரசியலுக்கு புதியவர் என்றாலும், அவர், 8,000 கி.மீ., தொலைவு சென்று பிரசாரம் செய்திருக்கிறார் என்பது ஒரு வரலாறு.மேலும், சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி, தன் வெளிநாட்டு சொத்துகள் பற்றிய முழு விபரங்களை ஆவணத்தில் தந்ததாக தகவல் காணோம். மேலும் தந்தை பெயரை, 'இனிஷியல் ப' இன்றி குறிப்பிட்டிருப்பதும், இனி அதிக பின்புலத் தகவல்களைத் தரலாம்.துாத்துக்குடி, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடந்த சோதனை, அதற்கு வரித்துறை அளித்த சமாதானத்தில் ஒரு உண்மை வெளியாகி இருக்கிறது. வருமான வரித்துறைக்கு புகார் கூறுவோர், கருத்துகளை தேர்தல் ஆணையம், முதற்கட்ட நோக்கில் பரிசீலித்து, இதற்கான உத்தரவுகளை இடுகிறது. இதில் நிதியமைச்சகம், மத்திய அரசுக்கு அதிக வேலை இல்லை.
அதேபோல, இம்முறை, உ.பி., முதல்வர் ஆதித்ய நாத், 72 மணி நேர பிரசாரத் தடைக்குப் பின், பேசிய போது, 'மூன்று நாட்கள் தான், 'பஜ்ரங் பலி' என்ற அனுமன், காளி கோவிலுக்கு சென்று வழிபட்டதாக கூறியிருக்கிறார். அது, அவர் இயல்பு வாழ்வைப் படம் பிடிக்கும்.ஏனெனில், இத்தேர்தல் இன்னும் சில கட்டங்களை தாண்ட வேண்டிய நிலையில், போபால் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., பெண் வேட்பாளர் சாத்வி பிரயாக் ஒரு பெண் துறவி. இவர் மஹாராஷ்டிராவில் உள்ள மாலேகான் குண்டுவெடிப்பில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கு இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், அவரை விசாரித்த உயர் போலீஸ் அதிகாரி கர்கரே அன்று கேட்ட கேள்விகளையும், ஆபாசங்களையும், இப்போது அவர் அடுக்கி, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும், இனி அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் முடிந்தபின், அரசியல்வாதியாக நீடித்து இருக்க, ஊழல் அல்லது குற்றச்சாட்டுகள், ரகசியங்கள் அம்பலம் ஆகியவை பின்புலத்தில் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். அதே சமயம், காங்கிரஸ் கட்சியில், இதுவரை பிரசார தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி கூறிய குற்றச்சாட்டும், அதனால், அவர் அப்பதவியை துாக்கி எறிந்ததும், அரசியலில் பெண்கள் முக்கிய இடத்திற்கு வருவது என்பது எளிதல்ல என்ற நிலையை காட்டுகிறது. தன்னை மோசமாக நடத்த முன்வந்த அரசியல் குண்டருக்கு, கட்சி ஏன் முக்கியத்துவம் தந்தது என்ற அவரது கேள்வி, காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட பகிரங்கமான சவாலாகும்.

நம் தமிழகத்திலும், கரூர் காங்கிரஸ் பெண் வேட்பாளர், கலெக்டருடன் நடத்திய உரையாடல் ரசிக்கத்தக்கதல்ல என்பதை பலரும் அறிவர். பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை பழித்த ஆடியோ வெளியானதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், நம் முன்னேற்ற வீழ்ச்சியை பிரதிபலிக்கும் தகவலாகும். இவை ஒன்றிரண்டு தகவல்களாக காட்சி அளித்தாலும், நாடு முழுவதும் இன்னமும், 30 நாளில் என்னென்ன தகவல்கள் வரும் என்பதை, இன்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., 20க்கும் குறைவாக பெறும் பட்சத்தில், அவர்களது ஆட்சிக்கனவு எட்டாத ஒன்றே.

அதேபோல, மோடி முந்தைய அளவு வெற்றி பெற மாட்டார் என்ற கருத்துக் கணிப்புகள் சரி என கருதினாலும், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., - எம்.பி.,க்கள் சேர்வது சிரமம். இந்த சூழ்நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் திடீரென ஒரு அணியாக உருவாகும் நிலை வரலாம் என்பதை ஏன் ஒரு கருத்தாக கொள்ளக் கூடாது? தமிழகத்தில் மத்திய மற்றும் தென் சென்னையில் மிகக்குறைந்த அளவு ஓட்டுளே பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் படித்தவர்கள் அதிகம் இருந்த போதும், ஓட்டளிக்க முன்வராததற்கு காரணம், போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான ஈர்ப்பு குறைவா என்பதும், ஓட்டு எண்ணிக்கை முடிவில் தெளிவாகும். அதேபோல, கரூர் லோக்சபா தொகுதி யில், அதிக அளவு ஓட்டுகள் ஏன் என்பதும், தெளிவு பெற வேண்டிய விஷயமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement