Advertisement

கண்ணியமான பேச்சு காணக் கிடைக்குமா?

தேர்தலில், வெறுப்புணர்வு கக்கும் பரப்புரை, என்று ஓயும் என்பதற்கு, விடை காண முடியாது. இருந்தாலும், கட்சியில் உள்ள மிகப் பெரும் தலைவர்கள், தங்கள் வரம்பை எப்போது மீறுகின்றனரோ, அது பிரச்னையை ஏற்படுத்தும்.வெறுப்பைக் கக்கும் பேச்சு அல்லது தேர்தல் நன்னடத்தை விதிமீறிய பேச்சு எது, அதை யார் பேசினர் என்பதை உன்னிப்பாக அலசினால், கடைசியில் எந்த விடையும் வராது. மாறாக பிரசாரம் முடிந்து, தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து, முடிவுகள் வந்ததும், இவை பெரும்பாலும் மறந்து போகலாம்.பல்வேறு மாநிலங்களில், மாநிலக் கட்சிகள் ஆட்சி வந்தது, அந்தந்த மாநிலங்களில் ஒரு சில தலைவர்களை அடையாளம் காட்ட உதவியது என்பதை, மறுப்பதற்கு இல்லை. ஆனால், சிறிய கட்சிகளின் தலைவர்கள், தேர்தலில் ஜெயிக்க முடியாத பலர், தங்கள் மேடை அனுபவத்தைக் கொண்டு எதையும் பேசலாம் என்ற நிலை, கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவிட்டது.நாடு முழுவதும் ஒரே கட்சி ஆட்சி என்றிருந்த வரை, நேரு கூட எதிர்க்கட்சிகளை சாடிய விதம், தனிப்பட்ட விமர்சனம் என்றில்லா விட்டாலும், மற்ற கட்சித் தலைவர்களை அலட்சியமான கோணத்தில், 'நான்சென்ஸ்' என, விமர்சித்தது உண்டு.தமிழகத்தில், மறைந்த மாபெரும் தலைவர் ராஜாஜி கூட்டணி தத்துவத்தில் உதயமான, தி.மு.க., அரசு முதலில், தம் திராவிட நாடு கொள்கையை கைவிட்டது. ஆனால், அதன் தலைவரான அண்ணாதுரை, டில்லியில், ராஜ்யசபா எம்.பி.,யான பின், அவர் அடுக்கு மொழிப் பேச்சிலும், மற்ற மாபெரும் தலைவர்கள், இந்தியாவில் இருப்பதை அறிந்து, அதற்கேற்ப அதிக பண்பாடுகளையும் வலியுறுத்தினார். தமிழகத்தில், ஈ.வெ.கி.சம்பத், கோவை காங்கிரஸ் தலைவர், கருத்திருமன் ஆகியோர், இவ்வரிசையில் முன்னோடிகள்.ஆனால், ஜாதி, மத வெறி, தனிப்பட்ட முறையில் சாடல்கள், பல தலைவர்களின் உடன் பிறப்புகளாகின. பொய் தகவல்களை அவிழ்த்து விடுவதும் எளிதாகிப் போனது. தமிழகத்தில் ஓரளவு, எம்.ஜி.ஆர்., தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, பேச்சிலும், எழுத்திலும், வசைகளும், ஏகடியமும் அதிகம் உண்டு. தீப்பொறி ஆறுமுகத்தை, அதற்காகவே அவர் வளர்த்தார். இதைச் சமுதாயம் ஏற்றதற்கு, அவரது தேர்தல் வெற்றிகள் காரணம்.அதிக சீர்திருத்தங்களை பயன்படுத்த முடியாத காலத்தில், தேர்தல் கமிஷன் என்ன செய்ய முடியும்? கோர்ட் வழக்குகள் மூலம், தீர்வு காண்பது சுலபம் அல்ல.அகில இந்திய தலைவர்களில், சோஷலிச தலைவர் லோகியா, ராஜநாராயணன், இன்றைய லாலு போன்றோர் விமர்சனங்களும், ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை. பா.ஜ., வட மாநிலக் கட்சியாக இருந்த காலத்தில், அதற்கு, 'காந்தி அடிகளை கொன்ற கோட்சே கும்பல்' என்ற பட்டப் பெயரை, காங்கிரஸ் சூட்டியது, நிலைத்தது.அதன் தலைவர்களில் சிறந்த, வாஜ்பாயின் சொற்பொழிவு, எதிரிகளையும் ஈர்க்கும். அவர் தன் கட்சியில், மற்றவர்களை ஏளனமாக அல்லது கொச்சையாக பேசுபவர்களை, என்றுமே ஆதரித்தது இல்லை.அதற்கு அடையாளமாக, மிகப் பெரும் தலைவராக இருந்த, பால்ராஜ் மதோக், அதற்கடுத்ததாக, கோவிந்தாச்சார்யா போன்றோர், அக்கட்சியில் அடையாளம் தெரியாமல் போனது வரலாறு.இன்று, மத அடிப்படையில் பேசுவது என்பதுடன், தனிப்பட்ட விமர்சனங்கள் என்ற வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு என்ற கோணத்தில், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர், பரப்புரை செய்ய தடை விதித்திருக்கிறது, சுப்ரீம் கோர்ட். தேர்தல் கமிஷன் சுட்டிக் காட்டிய தகவலின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் எடுத்த அதிரடி இது.இந்திய இறையாண்மைக்கு சந்தேகம் வரும் வகையில், பாக்., ஆதரவு கருத்தைத் தெரிவித்திருக்கும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா, ஐதராபாத், எம்.பி., ஓவைசி, இலங்கை தமிழர் பாதிப்பு காலத்தில், சீமான் போன்றோரது விமர்சனங்கள், இந்திய அரசியலில், நீடித்த குறைகளாயின.அதில், ராகுல் மிகவும் வித்தியாசமான காங்கிரஸ் தலைவர். ஒரு நாட்டின் பிரதமரை தினமும், 'திருடர்' என்று பேசுவது அவருக்கு, மேடைப் பேச்சில், அதிக ஊக்கம் தரும் விஷயமாகி விட்டது. இன்று அவர் மீது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஆகிவிட்டது. அவரை ஆதரிக்கும் மிகப் பெரிய சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும், இதற்கு பதிலளிக்க, சாமர்த்தியத் தகவல்களுடன் காத்திருக்கின்றனர்.'காங்கிரசை காணாமல் செய்வோம்' என்ற மோடி பேச்சுக்கும், இதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. மேலும், வாஜ்பாயையும், மோடியையும் இன்று ஒப்பிடும் பலர், ராகுலின் தந்தைவழிப் பாட்டனார், பெரோஸ் காந்தியின் பார்லிமென்டரி பேச்சு, அரசியல் கண்ணியம், இவரிடம் இருக்கிறதா என்பதை ஒப்பிடாமல் இருப்பது, பரிதாபத்திற்குரியது.இத்தேர்தலில், இது ஒரு விவகாரம் ஆனது புதுமை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement