Advertisement

'நீட்' எதிர்க்கும், 'சீட்' வியாபாரிகள்!

'நீட்' எதிர்க்கும், 'சீட்' வியாபாரிகள்!
பா.கண்ணப்பன், வேலாண்டிபாளையம், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' குறித்து, தமிழகத்தில், தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளான, காங்கிரசும், கம்யூனிஸ்டும் இரட்டை வேடம் போடுகின்றன.இந்த தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், கூட்டணி கட்சியினரும், நீட் குறித்து, அதிகம் பேசுகின்றனர். 'மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், நீட் இருக்காது' என்கின்றனர்.காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் ஆளும் மாநிலங்களில், நீட் அனுமதிக்கப்பட்டிருக்கிறதே! தமிழக அரசியல்வாதிகள் சிலர் மட்டும், 'நீட் வேண்டாம்' என்பதன் காரணம் என்ன?மருத்துவக் கல்லுாரிகளை, அரசியல்வாதிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்துகின்றனர். 'சீட்'டுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் விலை நிர்ணயித்து, பணம் பறித்து வந்தனர். நீட் தேர்வு வந்த பின், 'சீட்' வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது.இதற்கு முன், மருத்துவக் கல்லுாரியில், சீட் வாங்க வேண்டுமெனில், நிச்சயமாக, ஓர் அரசியல் தலைவரையோ, புரோக்கரையோ தெரிந்து வைத்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால், மருத்துவம் படிப்பது சாத்தியமில்லை.எனவே தான், தகுதியானவர்களுக்கு, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நீட் தேர்வை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், தொழிலாளியின் மகளும் கூட, தகுதி அடிப்படையில், சீட் பெற முடிந்தது.ஆனால், 'மருத்துவக் கல்விக்கான, 15 சதவீத சீட்களை, 'நேஷனல் கோட்டா'விற்கு வழங்கி விடுவதால், அவற்றில், வெளிமாநில மாணவர்களே அதிகம் பயன்பெறுகின்றனர்' என, தமிழகத்தில் இருக்கும் சிலர் சொல்கின்றனர்.ஆனால், உண்மை அதுவல்ல; தகுதி படைத்த தமிழக மாணவர்களுக்கும், அந்த ஒதுக்கீட்டில், தமிழகத்திலோ, வெளிமாநிலங்களிலோ படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.தவறான பிரசாரம் செய்து, காமராஜரை, கருணாநிதி தோற்கடித்ததை போல, அவரது மகன் ஸ்டாலின், தற்போது மோடியை தோற்கடிக்க முயற்சிக்கிறார்.ஓட்டு போடும் முன், தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்!

சிந்தியுங்கள்வாக்காளர்களே!

வி.எஸ்.ஹரிஹரன், குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒரு காலத்தில், தேர்தல் களங்களில் காமராஜர், கக்கன், பட்டேல், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் போன்ற நேர்மையான தலைவர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்கும், சில லட்சம் ரூபாய்களே தேவைப்பட்டன.ஆனால் இன்று, தேர்தலில், நல்லவர்கள் போட்டியிடுவதே இல்லை. 2019 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு ஆகலாம். மொத்தமும், மக்களின் வரிப்பணம்.இப்படி, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்படும், எம்.பி.,க்களில், எத்தனை பேர், நாணயமானோர், பொருளாதார வல்லுனர்கள் என சிந்தித்தால், வேதனை தான் மிஞ்சும்.இன்று பெரும்பாலும், ஊழல்வாதி, கிரிமினல் தான், வேட்பாளர்களாக காணப்படுகின்றனர். நல்லவர்கள் சிலர், போட்டியிட்டாலும், 'சுயேச்சை' என, மக்கள் புறக்கணித்து விடுகின்றனர்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்ந்து, இப்போது யோசித்து, ஓட்டளிக்க வேண்டும்; வாக்காளர்களே, சிந்தி யுங்கள்!


வாக்காளர்களுக்குதெரியும்!
ப.தங்கவேல், துடியலுார், கோவையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கை பற்றி, தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அக்கட்சியினர் கவலைப்படுவதில்லை; ஏனென்றால், அதில் கிடைப்பது, 'ஓசி' விளம்பரம்!ஹிந்து மதத்தை துாற்றும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் குடும்பத்தில் பெரும்பாலானோர், கோவில், குளம் சுற்றுவது, ஊர் அறிந்த விஷயம்.'பா.ஜ., ஒரு மதவாத கட்சி' என, விமர்சிக்கும் தி.மு.க.,வினர், பதவி சுகத்திற்காக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுடன் கூட்டணி அமைத்ததை, யாரும் மறக்கவில்லை.பதவி கிடைக்கும் என்றால், 'ஹிந்துகள், நல்லவர்கள். பா.ஜ., மதவாத கட்சி அல்ல' என்பது தான், தி.மு.க.,வின், 'பகுத்தறிவு' கொள்கை!அதேபோல் தான், ஹிந்தி எதிர்ப்பும். 'தமிழகத்தில், ஹிந்தியை அனுமதிக்கவே கூடாது' என, போராட்டம் நடத்தியவர், கருணாநிதி. ஆனால், தன் குடும்பத்தினருக்கு, ஹிந்தி தெரியும் என, மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்தார்.தன் குடும்பம் வளர வேண்டும் என்பதற்காக, தமிழக மக்களை முன்னேற விடாமல் தடுப்போர், தி.மு.க.,வினர். இதை தற்போது, வாக்காளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

'படம்' காட்டியதுபோதும்!

ஏ.திருப்ரம்மா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்த லோக்சபா தேர்தலில், 'பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க வேண்டாம்' என, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலர், ஒன்றிணைந்து, வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.'சில ஆண்டுகளாக, வன்முறை கலாச்சாரம் அதிகரித்துள்ளது; மக்களிடையே, பிரிவினைவாதம் துாண்டப்படுகிறது; சர்வாதிகார நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என, அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.கடந்த, காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதை, பா.ஜ., ஆட்சியிலும் நடந்த, கலவரங்களின் எண்ணிக்கை என்ன? மத ரீதியில், எத்தனைப் பேர் கொலை செய்யப்பட்டனர்? எந்த ஆட்சியில், பயங்கரவாதச் செயல்கள் அதிகம் அரங்கேறின?இது போன்ற, பல கேள்விகளுக்கு, இந்தியா முழுவதும் ஆய்வு செய்து, அதன் பின், அவர்கள், அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். யாரிடமோ பெற்ற பலனுக்காக, ஆதாரமில்லாமல், குற்றம் சாட்டக் கூடாது.குஜராத் கலவரத்திற்கு, வாய் கிழிய குரல் கொடுத்தோர், அந்த கலவரத்திற்கே காரணமான, ராம பக்தர்கள், 58 பேர் கரிகட்டைகளாக கிடந்த, கோத்ரா ரயில் எரிப்புப் பற்றி, ஏன் குரல் எழுப்பவில்லை?ஒருவர் கொலை செய்யப்பட்டால், கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், கொன்றவனின் மதம், ஜாதி பார்த்து, 'காரியத்தோடு' குரல் கொடுப்போர் யார்?கல்வி, வேலை வாய்ப்பு என, அனைத்திலும், மத ரீதியாக, மக்களை பிரித்து, பிரிவினைவாத அரசியல் செய்தது, எந்த கட்சியின் ஆட்சி? சமநோக்கு சிந்தனையில், அனைத்து மக்களையும் ஒன்றாக கருதுவது, எந்த ஆட்சி என்பது, எங்களுக்கு தெரியும்.இயக்குனர்களே... நீங்கள், 'படம்' காட்டியது போதும்! எது, சிறந்த ஆட்சி என்பதை, நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பாரதிராஜா பழனியப்பன் அமீர் போன்ற இயக்குனர்கள் தமிழ்த்தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் அதேநேரம் திமுகவின் அல்லக்கைகள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பாரதிராஜா பழனியப்பன் am

 • Bhaskaran - Chennai,இந்தியா

  என்மகன் ஜந்துமொழிபேசுவான் என்றுபெருமை பேசும் துரைமுருகனை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளணும் மாறன் சகோதரர்கள் கணியக்கா உதயநிதி போன்றோர் ஹிந்தியில் நான்குபேசக் கூடியவர்கள் என்று சொல்வார்கள் ஊருக்கு தான் உபதேசம் இன்னும் இவர்களை நம்பி நவோதயா பள்ளிகளை வரவிடாமல் செய்து நம் தலையில் நாமே மண்ணைப்போட்டுக்கொண்டு இருக்கிறோம்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஜெகத் பாரிவேந்தர் ,பங்காரு போன்ற கல்வி தந்தைகள் நீட்கொண்டுவந்தால் அவர்கள் பிழைப்பு கெடும் என்பதால் இதனை எதிர்க்கின்றனர்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  திருப்பிரம்ம சார் வேலூர் டாக்டர் கொலை முதல் கும்பகோணம் ராமலிங்கம் போன்று தமிழகத்திலும் பாலைவனத்தவர் நடத்திய கொலைகளை மறந்து விட்டீர்களே, அதற்க்கு "இனைந்து" குரல் கொடுத்தார்களா?

 • Siva - Aruvankadu,இந்தியா

  கடந்த ஓர் ஆண்டு தினமலர் இது உங்கள் இடம் வாசகர்கள் கருத்துக்கள் படித்திருந்தாலே தமிழக பாஜக தலைவர்........... ஏதோ சொல்ல வந்தேன்... ஹும்.... பொது வாழ்வில் பத்திரிகை படிக்கும் பழக்கம் மிகவும் முக்கியம்.......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement