Advertisement

‛பறவை'க்கரணை


பள்ளிக்கரணை சதுப்புநிலம்
nsimg2250538nsimg

சென்னையில் அருகில் இருக்கும் ஒரே சதுப்புநிலம்.
சோழிங்நல்லுார் வரை பரந்து விரிந்துள்ள இந்த சதுப்பு நிலத்திற்கு தற்போது நிறயை பறவைகள் வந்துள்ளன.இதில் பிளமிங்கோ என்ற செங்கால் நாரை பறவையும்,பெலிகன் என்ற அழைக்கப்படும் கூழைகடா பறவையும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.
nsmimg682325nsmimg
பெரிய பெரிய கேமிரா லென்ஸ்களோடு புகைப்படக்கலைஞர்கள் கரை ஒரங்களி்ல் பறவைகளை படம் எடுத்தபடி இருக்கின்றனர்.கார்களில் குழந்தைகளோடு வருபவர்கள் வாகனங்களை ஒரங்கட்டிவிட்டு குழந்தைகளுக்கு பறவைகளைக் காட்டி மகிழ்கின்றனர்.
nsmimg682327nsmimg
இங்கு நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், நீளவால் இலைக்கோழிகள், நெடுங்கால் உள்ளான்கள் ,வாத்துகள் போன்றவைகளையும் காணலாம்.
nsmimg682328nsmimgஇந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் வேகமாக வறண்டு வருகிறது.தண்ணீர் வற்றிவிட்டால் பறவைகள் வேறு இடம் தேடிச்சென்றுவிடும் . ஆகவே பறவைப்பிரியர்கள் இப்போதே போய் பார்த்துக் கொள்வது நல்லது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement