Advertisement

பய(ண)ம்


பயணம்
கணவன் மனைவி மற்றும் ‛சிங்சான்' போல ஒடிவிளையாடும் துறு துறு குழந்தையைக் கொண்ட சிறு குடும்பம் அது.

கோடை விடுமுறைக்காக குளு குளு மலைவாசஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்கிறது.
இரவில் பயணம் செய்யும் போதும் சரி அவர்கள் தங்கியிருந்த பழங்கால வீட்டிலும் சரி ஏதோ ஒரு அமானுஷ்யம் இருந்து இவர்களை பயமுறுத்துகிறது.

திடீர் திடீரென காலடிச் சத்தம் கேட்கிறது யாரோ கூரையை பிறாண்டுகிறார்கள் எங்கிருந்தோ நாய் ஊளையிடுகிறது இந்த நிலையில் மின்சாரமும் போய்விடுகிறது.பெட்டில் படுத்திருந்த சிறுவனையும் காணோம்.
கணவன் கையில் இருப்பது ஒரே ஒரு டார்ச் லைட்தான், பயந்து நடுங்கும் மனைவி கையில் அந்த டார்ச் லைட்டை கொடுத்துவிட்டு சிறுவனைத் தேடி கணவன் ஒரு பக்கம் இருட்டில் தடவிக்கொண்டே ஒடுகிறான்.
இருளில் பயத்தில் சிக்கிக் கொண்ட மனைவி கையில் இருந்த டார்ச் லைட்டின் வெளிச்சம் பாயும் திசையில் எல்லாம் பயங்கரமான உருவங்கள் தோன்றி பயமுறுத்துகின்றன.உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்தக் குடும்பம் ஒன்று சேர துடிக்கிறது ஒடுகிறது அலறுகிறது காப்பாற்றச் சொல்லி துடிக்கிறது.

இந்தப் போராட்டத்தின் முடிவில் இருள் மடிகிறது, பொழுது விடிகிறது.
கணவன்,மனைவி,சிறுவன் என்ன ஆனார்கள் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டது என்ற மர்மத்தை விடுவிப்பதுடன் இந்த திகில் கதை முடிகிறது.
மதன் என்ற ஒரே ஒரு கலைஞர் மட்டுமே இந்த திகில் நாடகத்தின் நாயகன் நாயகி சிறுவன் எல்லாமே.இருட்டும் இவர் கையில் இருக்கும் டார்ச் லைட்டு்ம் கட கதாபாத்திரங்களே.
வழக்கமாக பார்வையாளர்கள் பாதுகாப்பான வெளிச்சத்தில் உட்கார்ந்து இருப்பர், திகில் திரைப்படமோ நாடகமோ துாரத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஆனால் இந்த திகில் நாடகம் நடக்கும் போது பார்வையாளர்களும் கும்மிருட்டில்தான் அமர்ந்து இருப்பர்.
நாடகத்தின் அமானுஷ்யங்களை எல்லாம் இவர்களும் சந்திப்பர், நீளும் ஒவ்வொரு நிமிட அனுமதியும் பார்வையாளர்களை பயப்படுத்தும் இப்படி ஒரு முற்றிலும் புதுமையான இந்த திகில் நாடகம் மதனின் கற்பனையில் உருவானது.
‛தியேட்டர்க்காரன்' தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த நாடகம் பற்றிய விசாரிப்பிற்கு சபரியை தொடர்பு கொள்ளவும்: 98849 66613.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement