Advertisement

‛தியேட்டர்க்காரனின்' வீரம்மாவின் காளை.

nsimg2248603nsimgஅது ஒரு சிறிய வீடு
வீட்டின் ஹாலில் இருபது முப்பது பார்வையாளர்கள் உட்கார்ந்து இருக்கின்றனர்.
பார்வையாளர்கள் எதிரே உள்ள இரண்டு துாண்கள் கறுப்பு காகிதத்தால் மறைக்கப்பட்டு இருக்கிறது, பின்னனி வெறுமனே விடப்பட்டு இருக்கிறது, அவ்வளவுதான் நாடகத்திற்கான அரங்கு.

சென்னையில் பல விழிப்புணர்வு நாடகங்களை நடத்திவரும் தியேட்டர்காரன் அமைப்பானது ‛கதை சொல்லல்' என்ற புது உத்தியின் மூலமும் நல்ல விஷயங்ளை மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.
ஒருவர் தான் படித்த, கேட்ட அல்லது கற்பனையாக யோசித்து வைத்துள்ள கதையை பார்வையாளர்களிடம் சுவைபட சொல்வார், சொல்லும் போது வெறுமனே சொல்லாமல் தேவைக்கேற்ப கதாபாத்திரமாகவும் மாறிவிடுவார்.
இந்த புது உத்திக்கு செலவு குறைவு என்பதுடன் மக்களிடம் எளிதாக போய்ச் சேர்கிறது என்பதுதான் முக்கியம்.மூன்று நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றம் செய்தனர்.
அதில் முதல் நாடகம் வீரம்மாவின் காளை.
nsmimg681768nsmimg
மடித்துக்கட்டிய வேட்டி,கையில்லாத பனியன்,தலையில் முண்டாசு கட்டு தோற்றத்துடன் மேடைக்கு வந்த இளைஞர் சாய் விக்னேஷ் தனக்கு நிறைய வாசிக்கும் பழக்கம் உண்டு என்றும் எழுத்தாளர் கு.ப.ரா எழுதிய ‛வீரம்மாவின் காளை' என்ற ஜல்லிக்கட்டு காளை பற்றிய ஒரு சிறு கதை தன்னை வெகுவாக பாதித்தது என்றும் அந்தக் கதையை சொல்கிறேன் என்றும் அறிமுகம் செய்துவிட்டு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
வீரம்மா பெயருக்கு ஏற்ற வீரம் செறிந்த கிராமத்து இளம் பெண்.அவர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்.காரி என்ற பெயர் கொண்ட அந்தக் காளையை யாரும் அடக்கியது இல்லை.
வீரம்மாவிற்கும் அவரது அத்தை மகன் காத்தானுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்த சூழ்நிலையில் ஒரு விருந்தில் வீரம்மாவின் தந்தையின் வெட்டிப்பெருமை வாக்கு வாதத்தில் போய் முடிகிறது.
வீரம்மாவின் காளையை அடக்கிப் பார் என்பதை சவாலாக ஏற்கிறான் காத்தமுத்து, திருமணம் நடக்க விருக்கும் சூழ்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு வேண்டாமே என பலரும் தடுக்கின்றனர் ஆனால் யார் சொன்னாலும் காத்தான் கேட்பதாக இல்லை
நடக்கப்போகும் விபரீ்தத்தை யார்தான் தடுக்க முடியும்.
nsmimg681769nsmimgஜல்லிக்கட்டு பயங்கரமாக நடக்கிறது முடிவி்ல் காத்தான்வெற்றி பெறுகிறான் அந்த சந்தோஷத்துடன் மாட்டின் கழுத்தில் இருந்து உருவிய துண்டை துாக்கி பார்வையாளர்களிடம் வெற்றிகரமாக காட்டுகிறான். அவன் எதிர்பார்க்காத நேரம் தோற்றுப் போய் விழுந்து கிடந்த காரி காளை விசுக்கென்று எழுந்து பிடிப்பட்தால் ஏற்ப்பட்ட அவமானத்தையும் அது தந்த மொத்த கோபத்தையும் தனது கூர்மையான கொம்பில் ஏற்றிக்கொண்டு காத்தானை முட்டி மோதி துாக்கி எறிந்துவிட்டு ஒடியது.
குத்துப்பட்ட காத்தானை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்,அலறியடித்து ஒடிய வீரம்மாவை பார்த்த காத்தான் வெற்றிகரமாக ஒரு புன்னகை சிந்திவிட்டு, தனது வெற்றிக்கு அடையாளமான காளையிடம் இருந்து உருவிய துண்டை பரிசாக தந்துவிட்டு இறந்தான்.
விரக்தியின் விளிம்பில் வீட்டிற்கு வந்த வீரம்மாளின் எதிரே அவள் வளர்த்த காரி நின்றது.காளையைப் பார்க்க பார்க்க வெறுப்பாக இருந்தது அது மாமன் உயிரைக்குடித்ததால் வந்த வெறுப்பா? அல்லது ஜல்லிக்கட்டில் தோற்றுப் போய் வந்து நிற்கிறதே? என்ற வெறுப்பா தெரியாது.
வீட்டு கூரையில் செருகி வைத்திருந்த வேல்கம்பை எடுத்தாள் ஆத்தீரம் தீர காரியை குத்தி கொன்றாள். எப்போதும் பொங்கலும் கரும்பும் வெல்லமும் ஆசை ஆசையாய் கொடுக்கும் எஜமானியம்மாள் இந்த முறை வேல்கம்பால் குத்திய போது அதையும் ஆசையாக அசையாமல் ஏற்றுக்கொண்டு காரி செத்துப் போனது.
உண்மையில் காத்தானும்,வீரம்மாவும் காரி காளையும் சந்தோஷமாக இருந்தனர் என்றுதான் கதையை முடிக்க விருப்பம் ஆனால் ‛வீண் பெருமை' காத்தானையும் காரியையும் பழிவாங்கிவிட்டது.இது வீரம்மாளை மட்டுமல்ல நம்மையும் மீளா சோகத்திற்கு ஆளாக்கிவிட்டது.
மேற்கண்ட கதையை சொல்லி முடித்ததும் பார்வையாளர் மத்தியில் பலத்த கைதட்டல். ஜல்லிக்கட்டில் காத்தானுக்கும் காரி காளைக்கும் நடக்கும் சண்டையையும், கடைசியில் வீரம்மாவின் வேதனைச் சிரிப்பையும் சாய் கணேஷ் வெளிப்படுத்திய விதம் மிக அருமை.
nsmimg681771nsmimgநாடகத்தில் ஊர்ப் பெயரையும் சாதிப்பெயரையும் தவிர்த்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் மேடையேற்றலாம் ‛தியேட்டர்க்காரன்' அணிக்கு நிச்சயம் பெருமையைத் தேடித்தரும்.
nsmimg681770nsmimg
இந்த நாடகத்தை உருவாக்கிய சபரீஷ்,ராகவ் உள்ளீட் தியேட்டர்காரன் அணிக்கு பாராட்டுக்கள் இந்த நாடகத்தை உங்கள் பகுதியில் மேடையேற்ற விருப்பம் இருந்தால் சபரீஷ்சை தொடர்பு கொள்ளவும்:98849 66613.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement