Advertisement

அதிகரிக்கும் செல்வாக்கு!

'பெண்கள் ஓட்டுகளை, எப்படி கவர்வது என்ற அரசியல் வித்தையை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, நன்றாக தெரிந்து வைத்துள்ளார்' என, பொறாமைப்படுகின்றனர், அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த, மேற்கு வங்கத்தில், திரிணமுல் கட்சியின் கொடியை பறக்க விட்டவர், மம்தா. 'இதற்கு காரணம், மேற்கு வங்க மாநில பெண் வாக்காளர்களிடம், அவருக்கு உள்ள செல்வாக்கு தான்' என, எதிர்க்கட்சியினரே, வெளிப்படையாக கூறுகின்றனர். இந்த லோக்சபா தேர்தலில், தன் கட்சி சார்பில், 18 பெண்களை களமிறக்கியுள்ளார், மம்தா. இது, அந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில், 41 சதவீதம். வேறு எந்தக் கட்சியும் இந்த அளவுக்கு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை.

அடுத்ததாக, மேற்கு வங்கத்தில், ஏழை பெண்களின் திருமணச் செலவுக்கு, நிதி உதவி அளிக்கும் திட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகளால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மம்தாவோ, 'இது, புதிய திட்டமல்ல; ஏற்கனவே அமலில் உள்ள திட்டம் தான். இதை ஏன் நிறுத்துகிறீர்கள்?' என, நீண்ட போராட்டம் நடத்தி, அதிலும் வெற்றி பெற்றுள்ளார். 'இந்த இரண்டு விஷயங்களாலும் பெண்களிடையே, மம்தாவின் செல்வாக்கு மேலும் அதிகரித்து விட்டது. இந்த தேர்தலிலும், நமக்கு பெரிதாக வேலையிருக்காது போலிருக்கிறது' என, முணுமுணுக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உண்டியல் குலுக்கிகள் ரொம்பநாள் ஆட்சிசெய்தும் மாநிலத்துக்கு பெரிய நன்மை செய்யவில்லை அதுதான் உண்மை

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    வரும் சட்டசபைத் தேர்தலில் அவ்வளவு எளிதாக பெரும்பான்மை பெற முடியாது .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement