Advertisement

அறிவியல் ஆயிரம்: மின்சார சேமிப்பு

மின்சார சேமிப்பு



மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல ஒயர்கள் தேவைப்படுகிறது. இம்முறையில் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் போது மின் இழப்பும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண தற்போது நானோ தொழில்நுட்பம் உதவுகிறது. இதில் உருவாக்கப்படும் நானோ ஒயர்களில் ஒருமுனை, நேர்மின் முனை, மற்றொன்று எதிர்மின் முனையாக செயல்படக்கூடியது. இந்த ஒயர்கள், தலைமுடியின் தடிமன் அளவில் உள்ளது. இந்த ஒயர்கள் மிக சிக்கலான மின்சுற்றுப் பாதையிலும் பயன்படுகின்றன. இவை பயன்பாட்டுக்கு வந்தால் கட்டுமான செலவு குறையும்.

தகவல் சுரங்கம்: நெல்லுக்கு மரியாதை



அறுவடை சீசனில் முதல் நெல்லின் ஒரு பகுதியை கோயிலுக்கு சமர்ப்பிப்பர். இறைவழிபாட்டில் நெல்லை வைத்து 'நிறைநாழி' என வழிபடுவர். ஜப்பானிய கலாசாரத்திலும் நெல்லுக்கு சிறப்பு சேர்க்கும் நடைமுறைகள் உள்ளன. ஜப்பானிய தயாரிப்புகளின் பிராண்ட் பெயர்கள் நெல்லைச் சேர்ந்தே உள்ளன. 'ஹோண்டா' என்றால் முக்கிய வயல் என அர்த்தம். டோயோடா எனில் 'முக்கியமான நெல் வயல்' என பெயர். தலைநகர் டோக்கியோ விமான நிலையத்துக்கு 'நொரிடர்' என்று பெயர். நொரிடா என்றால் வளர்ந்து வளைந்து நிற்கும் நெற்கதிர் உள்ள வயல் என அர்த்தம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement