

நமது இஸ்ரோ அதிகாரிகளின் இந்த சாதனையை ஏன் பொதுமக்கள் நேரில் பார்த்து பராட்ட வைப்பு தரக்கூடாது என்ற நீண்ட கால கோரிக்கை காரணமாக முதன் முதலாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைகோள்கள் உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் எடை 436 கிலோ ஆகும். எமிசாட் நமது ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!