Advertisement

சாதிக்க துடிக்கும் நீச்சல் வீரர் சபரிநாதனுக்கு கைகொடுப்போமா?

nsimg2241906nsimg
சாதனை மேல் சாதனை புரிந்து கொண்டு இருக்கும் நாகை நீச்சல் வீரர் சபரிநாதன் தனது அடுத்த சாதனையை நிகழ்த்த தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் ‛ ஸ்பான்சரை' எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
nsmimg679999nsmimgநாகையை அடுத்துள்ளது கீச்சாங்குப்பம் மீனவ கிராமம்.மிகவும் பழமையான இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை மீனவரான சுப்பிரமணியன்-பவளக்கொடி தம்பதியினர் மகன்தான் சபரிநாதன்.

nsmimg680000nsmimg
சபரிநாதன் பிறந்தது முதல் கரையிலே இருந்ததை விட கடலிலே இருந்த நாட்கள்தான் அதிகம்.காரணம் சிறு வயது முதலே இவனுக்குள் இருந்த நீச்சல் ஆர்வம்.
nsmimg680001nsmimg
நாகை மாவட்ட நீச்சல் பயிற்சியாளராக இருந்த ராஜா என்பவர் ஒரு நாள் சபரிநாதனின் நீச்சல் திறமையை கண்டு வியந்தவர் பையனை சிறப்பு பயிற்சி கொடு்த்து பட்டை தீட்டினால் நன்றாக ஜொலிப்பான் என்று முடிவு செய்து தகுந்த பயிற்சி கொடுத்தார்.
அவரது முயற்சியும் பயிற்சியும் வீண் போகவில்லை சபரிநாதன் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பினான்.பிரீ ஸ்டைல்,பட்டர் பிளை,பிரெஸ்ட் ஸ்டோக் போன்ற பிரிவுகளில் கில்லாடியான சபரிநாதன் இதுவரை மாநில அளவில் 600 பதக்கங்களையும்,தேசிய அளவில் 7 பதக்கங்களையும்,சர்வதேச அளவில் ஒரு பதக்கத்தையும் குவித்துள்ளான்.
தற்போது ஈஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லுாரி மாணவராக இருக்கும் சபரிநாதன் எல்லோரையும் போல அல்லாது, நீச்சலில் புதுவிதமான சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது கைகால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டு எட்டு கிலோ மீட்டர் துாரம் கடலில் நீ்ந்தி இதுவரை யாரும் சாதித்திராத சாதனையை படைத்துள்ளான்.
இதற்காக 'வில் மெடல் வேர்ல்டு ரெக்கார்ட்' என்ற அமைப்புசபரிநாதனின் திறமையை பரிசீலித்து விருதுகள் மற்றும் கேடயங்கள்' வழங்கி சிறப்பித்துள்ளது.
தற்போது நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித் மேற்பார்வையில் இன்னும் சிறப்பாக தன்னை மேம்படுத்துக் கொண்டுள்ள சபரிநாதனுக்கு நிறைய சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு வருகிறது, போனால் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நிச்சயம் பதக்கம் பெற்றுவருவார்.ஆனால் போட்டி நடைபெறும் ஊர்களுக்கு போய் வருவதற்கான செலவு பணத்தை திரட்ட முடியாததாலேயே பல போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.
நமது மீனவர்கள் சுதந்திரமாக கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடையிலான துாரத்தை ஒரே மூச்சில் ஒய்வின்றி நீச்சலடித்து கடக்கவும் எண்ணியுள்ளார் இதற்கும் உபயதாரர் தேவை.
சபரிநாதன் என்ற நீச்சல் வீரர் தனது வறுமையான சூழ்நிலைக்கு நடுவிலும் நீச்சலில் பல சாதனைகள் படைத்ததுடன் மேலும் மேலும் பல சாதனைகள் படைத்திட விரும்புகிறார் அவருக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாக சபரிநாதனை தொடர்பு கொள்ளலாம் எண்:9597695559.
படம்,தகவல் உதவி:மிட்டல்ராஜ்,நாகை.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement