Advertisement

'டவுட்' தனபாலு

காங்., தலைவர் ராகுல்:பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலும், சர்வாதிகாரத்தனமாக செயல்படுவதிலும், ஒரே மாதிரியாக உள்ளனர். இவர்கள் இருவரும், யார்பேச்சையும் கேட்க மாட்டார்கள்.
டவுட் தனபாலு: யாரும் சுயமா செயல்படக் கூடாதா... அதிலும் குறிப்பா, பிரதமர் மற்றும் முதல்வர் நாற்காலியில் அமர்பவர்கள், உங்க குடும்பத்தினர் சொல்வதைக் கேட்டு நடக்கணும்னு எதிர்பார்ப்பது, சர்வாதிகாரம் இல்லையா என்ற, 'டவுட்'டை, பதிலுக்கு எழுப்பிடப் போறாங்க...!


முதல்வர், இ.பி.எஸ்.: கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஓய்விலிருந்த நிலையிலும், அவர் தான் தலைவர் பதவியை வகித்தார். ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். மகன் மீது கூட, தந்தைக்கு நம்பிக்கை இல்லாதபோது, மக்கள், ஸ்டாலின் மீது எப்படி நம்பிக்கை வைப்பர்?
டவுட் தனபாலு: இவ்வளவு எல்லாம் யோசிக்காதீங்க... உங்களுக்கு, ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும்...ஜெயலலிதாவும், மூணு முறை, பன்னீரிடம் தானே, முதல்வர் நாற்காலியைக் கொடுத்தாங்க... இப்போ நீங்க, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கீங்களா, இல்லையா என்ற, 'டவுட்'டுக்கு பதில் தேடுங்கள் போதும்...!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஜெ., மரணம் குறித்து முறையாக விசாரித்து, குற்றவாளிகளை சிறையில் அடைப்பதே, முதல் வேலை.
டவுட் தனபாலு: விசாரணை கமிஷன் அமைத்ததோடு வேலை முடிந்து விட்டதாக நினைத்த ஆளும் தரப்பு, இந்தத் தேர்தலில், ஜெ., மரணம் குறித்து, வாயே திறக்காமல் இருக்கு... நேரம் பார்த்து, நீங்க அதை கையில் எடுத்துட்டீங்க... ஆமா, ஜெ., மீதான அக்கறையில் இதைச் சொல்றீங்களா... இல்லை, ஜெயலலிதா அனுதாபிகளின் ஆதரவைப் பெறச் சொல்றீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஜெ மரணத்தை தோண்டியெடுத்தால் திமுகவின் வாயை அடைக்க சின்னம்மா பல பெரிய பெட்டிகளைத்தருவார் என்னும் ஆசைதான்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ‘கூவத்தூர் அத்தியாயத்தில்’ சசிகலாவின் குட் புக்கில் இடம் பிடித்து அவர் கைகாட்டித்தான் இவர் இன்று முதல்வரானார். ஜெ. மரணத்தின் பழம் தின்பவர் அடுத்தவரைக் கூற வாயேது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement