Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை


அ.ம.மு.க., சென்னை வடக்கு மாவட்ட செயலர் வெற்றிவேல், 'கிச்சு கிச்சு' பேட்டி: ஆர்.கே.நகரில் முன்பு, ஓட்டுக்கு, 6,000 ரூபாயை, ஆளும் கட்சியினர் கொடுத்தனர். மக்கள் வாங்கிக் கொண்டு, எங்களுக்குத் தானே ஓட்டு போட்டனர். பணத்திற்காக ஓட்டளிப்பது, மலையேறி விட்டது. இந்த ஆட்சி மீது, மக்களுக்குக் கோபம் இருக்கிறது. தினகரனை நல்ல தலைமையாக, மக்கள் பார்க்கின்றனர்.


தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி பேச்சு: அரசியல் நாகரிகமின்றி, பா.ம.க., தலைவர் ராமதாசை, ஸ்டாலின் விமர்சிக்கிறார்; தே.மு.தி.க., பற்றியும் பேசுகிறார். இதிலிருந்தே, அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் எதிரியான, தி.மு.க.,வை அழிக்கும் தேர்தல் இது. எதிரியை மட்டுமல்ல; துரோகியையும் அழிக்க வேண்டும்.

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி பேட்டி: பொள்ளாச்சி சம்பவத்தில், ஜெயராமனின் மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக, செய்திகள் வருகின்றன. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம், ஜெயராமனை கட்சியிலிருந்தே நீக்கியிருப்பார். 'அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்' எனக் கூறுபவர்கள், ஜெயராமனின், எம்.எல்.ஏ., பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லி, வற்புறுத்தியிருக்க வேண்டாமா... இதேநிலை நீடித்தால், தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, எந்தளவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாதா?


தமிழக, காங்., தென் சென்னை மாவட்ட தலைவர், கராத்தே தியாகராஜன் பேட்டி: கோஷ்டி இல்லாமல், எந்தக் கட்சியும் இருக்க முடியாது. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, தலைவர் ராகுல், சோனியா மட்டுமே, ஒரே தலைமை. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைந்து, தேர்தல் பணிகளை மேற்கொள்வோம். ஆட்சி மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது, கோஷ்டி பூசலுக்கு வேலை இல்லை.


தமிழக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர ராவ் பேட்டி: ஆட்சி வந்தால் அமைச்சர், கட்சியில் மாவட்டச் செயலர் என, ஆண்டு அனுபவித்த நபர்களையே மீண்டும் உட்கார வைத்து, சிற்றரசர்களாக்க, பா.ஜ., என்ன, தி.மு.க.,வா, இல்லை காங்கிரசா? இங்கே, வேட்பாளரின் முகம் என்பது, மோடியின் முகம் தான். இளைஞர்களுக்கு உரிய பதவி, அதிகாரம், பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, எல்லாவற்றிலும், இளைஞர் சக்தியை மதிப்போம்.


'உங்க சேவை, பா.ஜ.,வுக்குத் தேவைன்னு, யாரும் கேட்டாங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி பேட்டி:அ.தி.மு.க., அணியில், பா.ஜ., இடம் பெற்றிருப்பது, ஏற்புடையது அல்ல. அ.தி.மு.க.,விடம், 5 தொகுதிகளை, பா.ஜ., பெற்று நிற்பதில், எனக்கு உடன்பாடு இல்லை. பா.ஜ., 40 தொகுதிகளிலும், தனித்துப் போட்டியிட்டால், தேர்தல் பிரசாரம் செய்திருப்பேன்.


தமிழக துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேச்சு:அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்று, தனியாக கட்சி ஆரம்பித்தவர்கள், ஜாதி கட்சி ஆரம்பித்தவர்கள் யாரும், உருப்பட்டதே கிடையாது. கடந்த காலத்தில், கம்யூ., கட்சியினரை, ஜெயலலிதா வீட்டிற்கே அழைத்துச் சென்று, நான் சீட்டு வாங்கிக் கொடுத்தேன்.ஆனால், இன்று அக்கட்சியினர், நன்றி மறந்து விட்டனர். நாங்கள் அப்படியல்ல... ஜல்லிக்கட்டு நடத்த, 24 மணி நேரத்திற்குள் அனுமதி தந்தவர், பிரதமர் மோடி. அந்த நன்றி உணர்வோடு தான், பா.ஜ.,வுடன் இணைந்திருக்கிறோம்.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், வைகைச்செல்வன் பேட்டி: அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களில், சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள், இளைஞர்கள் தான். அ.தி.மு.க., என்றைக்குமே, இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக தான் விளங்குகிறது.அ.தி.மு.க., பொதுக்கூட்டங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில், இளைஞர்கள் தான் அதிகளவில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், நான்கில் ஒருவர், அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவராக உள்ளார். எனவே, தேர்தலில் நிச்சயம் எங்களுக்கே வெற்றி.


தே.மு.தி.க., துணை பொதுச்செயலரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் பேட்டி:அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, முதல்வராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் அமைத்த, மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் தோல்விக்கு, சில கட்சிகளின் தவறான நடவடிக்கைகளே காரணம். இதே நடவடிக்கைகளை, ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியிலும், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல்படுத்தி, அக்கூட்டணியை தோல்வியுறச் செய்த பிறகே, வெளியே வருவார்.நாங்கள், மக்கள் நலக் கூட்டணியில் அடைந்த பாதிப்பை, தி.மு.க.,வும் இனி, வைகோவால் பெறும்.


தமிழக, காங்., மூத்த தலைவர், இளங்கோவன் பேச்சு:இ.பி.எஸ்., என் மீது, மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார்; அதை நான் சந்திப்பேன். குறுக்கு விசாரணைக்கு வாய்ப்பு இருந்தால், முதல்வரை கூண்டில் ஏற்றி, விசாரணை செய்ய தயாராக உள்ளேன்.வழக்குகளின் மூலம், என்னை முடக்கி விடலாம் என, நினைக்க வேண்டாம். என்னைப் போன்றவர்கள் மீது, வழக்குகள் போடப் போடத்தான், வேகம் அதிகரிக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இம்முறை நோட்டாவைவெல்லுவீரா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையில் பெண்கள் விஷயத்தில் ஜெ மிகவும் அக்கறை உள்ளவர் அவர்களுக்கு தீங்கிழைப்பவன் எவனானாலும் தூக்கி எறிந்துவிடுவார்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இருந்தாலும் இம்முறை எதுவும் நிகழாததுக் குறித்து மக்கள் கோபத்துடன் உள்ளனர்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையில் கம்யூனிஸ்ட்கள் நன்றி மறந்தவர்கள்தான் அந்தக்கால அண்ணாதுரை எம்ஜியார் ஜெ போன்றவர்கள்தான் இவர்களுக்கு விலாசம் தந்தவர்கள் இவர்களின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் மக்களிடமிருந்து தனிமைபட்டுப்போய்விட்டனர் சனிக்கிழமை உண்டியல் குலுக்க தவறமாட்டார்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வைகோவின் ராஜதந்திரம் இம்முறையும் பணிசெய்ய தேவி ஜக்கம்மாவும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை பெருமாளும் அருளவேண்டும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இம்மாதிரி கலைஞரை பேசி பின் சோனியாவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது நினைவில்லயா இளங்கோவன் ஐயா அவர்களே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement