Advertisement

மதுரை பஞ்சாயத்தால் மண்டை காய்ந்த, அ.தி.மு.க., தலைமை!

மதுரை பஞ்சாயத்தால் மண்டை காய்ந்த, அ.தி.மு.க., தலைமை!

''நாயரே, சூடா சுக்கு காபி போடும்...'' என, பெஞ்சில் அமர்ந்தபெரியசாமி அண்ணாச்சி, ''பா.ஜ.,வினரை உசுப்பேத்திட்டு போயிருக்காரு வே...'' என,விஷயத்திற்கு வந்தார்.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார்,குப்பண்ணா.''கோவை லோக்சபா தொகுதியின், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்துல, பா.ஜ., பொதுச் செயலர்முரளீதர ராவ் கலந்துக்கிட்டாரு வே...''அவர் பேசுறப்ப, 'நம்ம கட்சிக்காரங்க எல்லாரும், வீடுகள்லயும், டூ - வீலர்கள்லயும் கண்டிப்பா, கட்சி கொடிகளை கட்டணும்... வழியில, தேர்தல் அதிகாரிகள் மடக்கி, கொடியை கழற்ற சொன்னா, 'ஆர்டரை காட்டுங்க'ன்னு கேளுங்க... அதையும் மீறி கழற்றினா, அதை போன்ல வீடியோவா எடுங்க...'ன்னு சொன்னார்...''மேலும், 'நாம, சட்ட ரீதியா பார்த்துக்கலாம்... போலீசுக்கு பயந்த கட்சிக்காரங்க, சாமியாரா போயிடுங்க'ன்னு உறுமி அடிச்சிட்டு போயிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.''போன்ல சத்தமா பேசுறது ஒரு குற்றமாங்க...'' என, நண்பர்களை பார்த்து கேட்ட அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்டத்துல, தேர்தல் கண்காணிப்பு அலுவலரா, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வந்திருக்கார்... இவர் ஏற்கனவே, இந்த மாவட்டத்துல, உயர் அதிகாரியா இருந்தவர் தான்...''சமீபத்துல, ஸ்டார் ஓட்டல்ல இருந்த டைனிங் ஹாலுக்கு அதிகாரி போயிருக்காருங்க... பக்கத்து டேபிள்ல ரெண்டு பேர், மொபைல் போன்ல, சத்தமா பேசிட்டு இருந்திருக்காங்க... கடுப்பான அதிகாரி, போலீசுக்கு போனை போட்டு, ரெண்டு பேரையும் கைது பண்ண சொல்லிட்டாருங்க...''பெரம்பலுார் போலீசாரும் அங்க வந்து, ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு தள்ளிட்டு போனாங்க... அதிகாரி, எழுத்துமூலமா எந்த புகாரும் தராததால, அவர்கிட்ட தயங்கி, தயங்கி கேட்டிருக்காங்க...''அவங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பும்படி, அதிகாரி சொல்லிட்டார்... இந்த அதிகாரி, வேகமா கார் ஓட்டுன, தன் டிரைவரையே ஒரு காலத்துல, கைது பண்ண உத்தரவு போட்டவரு தானுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''நாயரே, அனில்மேஷ்ராம்னு யாராவது, என்னை தேடி வந்தாங்களா வே...'' என, அண்ணாச்சி கேட்க, அவர் உதட்டை பிதுக்கினார்.''மதுரை பஞ்சாயத்தால தான், வேட்பாளர் பட்டியல் தாமதம் ஆகியிருக்கு பா...'' என, கடைசி தகவலுக்கு நகர்ந்தார் அன்வர்பாய்.''அ.தி.மு.க.,வுல தான... அட, வெளக்கமா சொல்லுங்ணா...'' என, அவசரப்படுத்தினார் கோவை, கோவாலு.''இ.பி.எஸ்., பன்னீர்செல்வம் முன்னிலையில நடந்த பஞ்சாயத்துல, மதுரையில, தன் மகன், ராஜ் சத்யனுக்கு சீட் தந்தே ஆகணும்னு, ராஜன் செல்லப்பா பிடிவாதமாஇருந்திருக்கார்...''ராஜன் செல்லப்பா, மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ.,ன்னு ரெண்டு பதவிகள் வச்சிருக்கும் போது, மகனுக்கும், எம்.பி., சீட்டான்னு, விவாதம் வந்திருக்கு... அமைச்சர் உதயகுமாரும், தன் பங்குக்கு ஒருத்தரை சிபாரிசு செய்ய, எல்லாரும் மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க பா...''கடைசியா, ராஜன்செல்லப்பா, மாவட்ட செயலரா இருந்த பகுதிகளை பிரிச்சு, அமைச்சர் உதயகுமாருக்கு மாத்திவிட்டு, ராஜ் சத்யனுக்கு சீட் குடுத்திருக்காங்க... இப்ப, எம்.பி.,யா இருக்கிற, கோபாலகிருஷ்ணனுக்கு, சீட் மறுக்கப்பட்டதால, அவரது யாதவர் சமுதாயத்தினர், அ.தி.மு.க., மேல கோவத்துல இருக்காங்களாம் பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement