Advertisement

ஓட்டுக்காக மதங்களை இழுக்காதீர்!

ஓட்டுக்காக மதங்களை இழுக்காதீர்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., ஆட்சியில் அமர்ந்ததும், சர்ச் மற்றும் மசூதிகளின் சொத்துகள் பாதுகாக்கப்படும்; ஹிந்து கோவில்களின் சொத்துகளை, குத்தகைக்கு எடுத்துள்ளவர்களுக்கே, அந்த சொத்துகள் பட்டா செய்து, வழங்கப்படும்' எனக் கூறுகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்; இந்த பேச்சைக் கேட்டு, அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை.சர்ச், மசூதிகள் மற்றும் அவற்றின் சொத்துகள், அந்தந்த மத ஸ்தாபனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அவற்றை யாரும் ஆக்கிரமித்து இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஹிந்து கோவில்களில் மட்டுமே, அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.தமிழகத்தில், 5,000 சர்ச் மற்றும் 5,000 மசூதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்... ஒரு மசூதி மற்றும் சர்ச்சின் பாதுகாப்பிற்கு, நான்கு காவலர்கள் என்றால், 10 ஆயிரம் மசூதிக்கும், சர்ச்சுக்கும், கோடிக்கணக்கான ரூபாயை, அரசு செலவழிக்க வேண்டும்.மசூதிகளின் நிர்வாகங்களும், சர்ச்சுகளின் நிர்வாகங்களும், 'வழிபாட்டுத் தலங்களுக்கு, பாதுகாப்பு கொடுங்கள்' என, கோரிக்கை ஏதும் வைக்கவில்லையே... அப்படி இருக்கையில், எதற்காக, 'பாதுகாப்பு கொடுப்போம்' என, ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்குகிறார்?'ஹிந்து கோவில்களின் சொத்துகளை, குத்தகைக்கு எடுத்துள்ளவர்களுக்கே அந்த சொத்துகள், பட்டா போட்டுவழங்கப்படும்' என்றும், ஸ்டாலின் கூறியுள்ளார்.அறங்காவலர்கள், அறங்காவலர் குழுத் தலைவர், உறுப்பினர்கள் என்ற பேட்ஜை குத்தி, அரசியல்வாதிகள் தானே, ஹிந்து கோவிலுக்குள் உட்கார்ந்து உள்ளனர்! கோவில் நிலங்களையும், வீடுகளையும், கடைகளையும், குத்தகைக்கும் வாடகைக்கும், எடுத்து இருப்போர், அரசியல்வாதிகள் தானே!இந்த லட்சணத்தில், 'அவர்களுக்கே, கோவில் நிலங்களை உரிமையாக்கிக் கொடுப்போம்' என, ஸ்டாலின் கூறுவது, எந்த வகையில் நியாயம்?

தாமரை மலரைவிற்க தடைபோடுவர்!

என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துார், ஆண்டாள் கோவிலில், கோலம் போட்ட பெண்கள் சிலர், தாமரையை அழகாக வரைந்துவிட்டனராம்!இந்த, 'அடாவடி'த்தனமான செயலை பார்த்து, கொதித்து போன,டி.எஸ்.பி., ஒருவர், 'ஆன்மிக விதிப்படி, இது சரியாக இருக்கலாம்; ஆனால், தேர்தல் விதிப்படி, பெரிய குற்றம்' எனக் கூறி, தன்னை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டி, கோலத்தையும் அழிக்க சொல்லி விட்டார்.போலீஸ் அதிகாரியின், மிரட்டலை பார்த்து, அரண்டு போன கோவில் ஊழியர்கள், வேக வேகமாக, கோலத்தை அழித்து, பாவ விமோசனம் மற்றும் பரிகாரத்தை தேடி கொண்டனராம்!'ஆண்டவன் கோ வில் என்றாலும், தாமரை மலருக்கு இடமில்லை' என, புலவர்நக்கீரன் பாணியில், தன் எதிர்ப்பை காட்டிய, டி.எஸ்.பி.,யை பார்த்து, அந்த ரங்கமன்னாரே,ஆடிப்போனாராம்!டி.எஸ்.பி.,யின் செயல் கண்டு, வைகோ, ஸ்டாலின், வீரமணி போன்ற பகுத்தறிவு பகலவர்கள், இனி பாராட்டு மழை பொழிவர்.கலெக்டர், எஸ்.பி., கோவில் நிர்வாக அலுவலர் போன்ற பொறுப்பான அதிகாரிகள் எல்லாம், 'கோலப் பிரச்னைக்கும், எங்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை' என, 'ஜகா' வாங்கி கொண்டனர். ஆனால், டி.எஸ்.பி., ஒருவர் மட்டும், நேர்மையாக காட்டிக் கொள்வது போல், நடித்தார்.நாத்திகரான, கருணாநிதி ஆட்சியில் கூட, இந்த அளவுக்கு, போலீஸ் கெடுபிடிகள், கோவில் விஷயங்களில் நடந்ததில்லை.ஏற்கனவே, ஸ்ரீவில்லிப்புத்துார், கோவில் கோபுரம், தமிழக அரசின் சின்னமாக இருப்பதை, பகுத்தறிவாளர் என்ற போர்வையில் சிலர் எதிர்த்து வருகின்றனர்.கோவில்களில், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வங்கள், தாமரைமலரில் அழகாக அமர்ந்துள்ளனர்.அதனால், 'தேர்தல் முடியும் வரை, இந்த தெய்வங்களை துணி போட்டு மூட வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவு போட்டாலும் போடுவர்; பூக்கடைகளில், தாமரை மலரை விற்க தடை போடுவர்.'தாமரை என்ற வார்த்தையை மறந்தும், தேர்தல் முடியும் வரை, யாரும் உச்சரிக்கக்கூடாது' என, கலெக்டர்கள் உத்தரவு போட்டாலும் போடுவர். கோவிலில், போலீஸ் அதிகாரி நடந்து கொண்ட செயல், பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.


லஞ்சத்தைஎப்பேற்பட்டாவதுஒழியுங்கள்!

பொன்.கருணாநிதி, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்சம் தொடர்பான வழக்கை விசாரித்த, நீதியரசர், சுப்பிரமணியம், லஞ்சத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, விரிவாக கூறியிருந்தார். அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், பொதுமக்களிடையே, பாராட்டுக்களை குவித்துள்ளன.லஞ்சம் ஒரு அலுவலகத்திற்குள், முடங்கி விடக்கூடிய செய்தி அல்ல. இதன், 'நெட்வொர்க்' மிகவும் பெரியது. உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர் என பலர், இந்த, 'நெட்வொர்க்'கில் மிக வலிமையாக இருப்பர்.லஞ்சம் பெற்ற, அரசு ஊழியர்களை கைது செய்வதுடன் நின்று விடாமல், அவர், தமக்காக மட்டும் லஞ்சம் வாங்கினாரா, மேலிடத்தில் யார் யாருக்கு, எவ்வளவு கொடுத்துள்ளார் என்பதை, தீர விசாரிக்க வேண்டும்.கான்ட்ராக்ட் கமிஷன், சர்வ சாதாரணமாக அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பிலிருந்து, இடமாறுதல் வரை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் சிக்குவதே இல்லை.அப்படி அரசியல்வாதிகள், சொத்து குவிப்பு வழக்குகளில் அபூர்வமாக பிடிபட்டாலும், அந்த வழக்கு விசாரணை, எத்தனை ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படுகிறது, இதற்கு யார் காரணம்என்பதும் தெரிந்தது தான்.லஞ்சம் வாங்குவோரை கண்டறிந்து, விரைவு நீதிமன்றங்கள் வாயிலாக, உச்சபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டால்மட்டுமே, இந்தகுற்றம், ஓரளவுக்கு குறைய வாய்ப்பு உண்டு.லஞ்சம் வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல; கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டங்களில், புதியமாற்றங்கள் வர வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • venkat Iyer - nagai,இந்தியா

  நீதியரசர் சுப்பிரமணியன் லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு முக்கியமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி கூறியதில் சில விஷயங்களை விட்டு விட்டார்கள் என்று கூறலாம்.1.லஞ்சம் ஒழிப்பு துறைக்கு போதுமான ஊழியர்கள் கிடையாது.2.மாநிலத்தில் மாவட்ட அளவில்தான் அலுவலகம் செயல்படுகிறது.இவர்களால் வட்டார அளவில் உடனடியாக நடக்கும் லஞ்ச புகார்களை கண்காணிக்கும் வகையில் ,ரகசிய விஷயங்களை பெற முடியாத சூழ் நிலை இருக்கின்றது.3.அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மத்திய மாநில அரசுகள் சிறப்பு நிதிகளை ஒதுக்குவது இல்லை.4.வருவாய் அற்ற துறை என்பதால், ஆய்வு செய்ய புதிய வாகனங்கள் இருப்பதில்லை.இதனை அளிக்க வேண்டும்.5.வழக்குகள் போடும் நிலையில்,சிறப்பு பாதுகாப்பு வசதிகள் வழங்க வேண்டும்.6.மாவட்ட அளவில் லஞ்ச ஊழல் தடுப்புமற்றும் கட்டுப்பாட்டுதுறை செயல்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு வரும் வகையில் பிராகாரத்தில் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும்.அரசு ஊழியர்கள் மக்களின் சேவகர்கள் என்ற எண்ணம் வரும் வகையிலும்,லஞ்சம் வாங்குவது மிகவும் தவறு என்ற எண்ணம் வரும் வகையில் உணர வைக்க வேண்டும்.

 • Kalyanaraman -

  கோவில் சொத்துக்கள் என்ன இவனோட அப்பன்போல ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்ததா? அது மன்னர்களும் செல்வந்தர்களும் காணிக்கையாகக் கொடுத்தது.இதை பட்டா போட இவன் யார்? இவனோட குடும்பம் மற்றும் கட்சியினர்போல் மக்களை மிரட்டிப் பிடுங்கியதல்ல. அப்படி குடுக்கணும்னா உன் குடும்பமும் கட்சியினரும் கொள்ளை அடித்ததை பட்டா போட்டுக்குடு. போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

 • Darmavan - Chennai,இந்தியா

  கோயில் சொத்து கடவுளின் பெயரில் இருக்கிறது,அரசின் பெயரில் இல்லை.அரசு ஒரு ட்ரஸ்டியே தவிர சொந்தக்காரனில்லை. கோயில் நடைமுறைகளை வருமானத்தை கொண்டு நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு.சொத்தின் உரிமையை மாற்றி எழுத அதிகாரமில்லை இதை வழக்காக எடுத்து சென்று அரசின் முறையற்ற செயலை தடுக்க வேண்டும்.

  • Kannan T S - chennai,இந்தியா

   ஸ்டாலின் ஒரு தத்துவ ஞானி ...... கோயில் இடத்தை குத்தகை எடுத்தால் அவருக்கே சொந்தம் . என்ன ஒரு தாராள சிந்தனை . தமிழகம் தான் பல தத்துவ ஞானிகலை ஈன்றெடுத்து உலகுக்கு அறிமுக படுத்தியது. மத சிந்தனை இல்லாத நாத்திக வாசனை வெறுப்பு பொறாமை தன்னை திருத்தம்செய்யாமல் மற்றவனை பழித்தல் என்பதை ஆதாரமாக கொண்டது. மன்னர்கள் கோயில் கட்டி மக்களுக்கான ஒழுக்கம் அன்பு தானம் தவம் கலை வீரம் நற்சிந்தனை கதைகள் நாடகம் என பல ஒருங்கிணைத்து தெய்வத்தை வணங்கிநார்கள். அதற்கு ஆதாரமாக நிலம் வழங்கி பெருமைப்பட்டார்கள். இன்று ஸ்டாலின் அவர்கள் குத்தகை எடுப்பார்க்கு அதனை சொந்தமாக்குவேன் என்றால் அங்கே மது கடைகள் திறக்கவா கோயில் வாசல் அடைக்கவா. ஏற்கெனவே கோயில் சொத்து விவரம் என்ன என்றால் விடைக்கு விவரம் நீதிமன்றம் பெறவில்லை ஒரு கால பூசை இல்லாமல் அரசை உதவி கேட்கும் கோயில்கள் உள்ளன. அண்ண தானம் மறைந்து போய் அதனை ஒப்பந்தம் விட்டு மக்கள் காசு கொடுக்கிறார்கள் பிரசாதம் பெற. இதனை மாற்றி யோசிக்கலாம். அவரது கட்சி தலைமையிடத்தை ஒப்பந்தம் விட்டு கட்சி தொண்டர்கல் தொலை கலை தொடர்பான நிறுவனங்கள் அதில் வேலை செய்ப்வர்கள் என அனைவருக்கும் சொந்தம் ஆக்கலாம் .சொந்த பணத்தை கொடுத்தால் தான் தானம் . இவரது கனவு அப்போது தான் நிறைவேறும் ஒரு பொருளை உருவாக்குபவனை உலகம் பாராட்டும் பகீர்த்தல் மக்களை பழக்க வைக்கும் தானம் மூலம் செய்ய வேண்டும் அது கொடுப்பவருக்கும் பெறுபவர்க்கும் அளவிட முடியாத பாசம் நன்றி இணைந்த பாலம்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அந்த டிஎச்பி எந்த கோட்டாவில் வந்திருந்தாலும் அவனுக்கு ஒரு ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement