Advertisement

ஒரு ஒவியரின் ‛புளூ டூத்' அனுபவம்...

nsimg2237538nsimg
சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தி்ன் மாதந்திர கூட்டத்தில் இந்த முறை அஜந்தா ஒவியப் பயிற்சி பள்ளியின் முதல்வர் நாகை மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
nsmimg678815nsmimgஇது நகைச்சுவை மன்றம் இங்கே நகைச்சுவையாக பேசவேண்டும் ஆனால் பேசுவதே அரிது இதில் எங்கே நகைச்சுவையாக பேசுவது விட்டுவிடுங்களேன் என்றேன், தலைவர் சேகர் கேட்பதாக இல்லை கொண்டுவந்து இங்கே நிறுத்திவிட்டார்.

nsmimg678816nsmimg
முதன் முதலில் பேசப்போகிறோம் என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி எனது படத்தைப் போட்டு விளம்பரம் வேறு செய்திருந்தது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி இதை முதலில் ஒரு நண்பனுக்கு அனுப்புவோம் பிறகு உறவு நட்புகளுக்கு அனுப்புவோம் என்று முடிவு செய்து நண்பனுக்கு அனுப்பினேன் பதில் இல்லை நானே கூப்பிட்டு விளம்பரத்தை பார்த்தாயா? என்று கேட்டேன் உங்களுக்கு எதுக்கு இந்த அற்ப ஆசை உங்க போட்டோவை கிராபிக்பண்ணி ஒட்டி வச்சுக்கிட்டு இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்ற ரீதியில் பேசினான்.
nsmimg678817nsmimg
அவன் என்னை ஒரு சிறப்பு விருந்தினராகவே மதிக்கவில்லை ஏற்கவில்லை இல்லைடா நிஜமா போகிறேன் போய் போட்டோல்லாம் எடுத்து போடுறேன் என்று சொல்லிவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.
விழாவில் என்னைப்பற்றி அறிமுகம் செய்யவேண்டும் குறிப்புகள் கொடுங்கள் என்றனர் ஆறு பக்கம் மெயிலில் அனுப்பினேன்,அந்த மெயிலும் பெயிலராகிவிட்டது அதனால் நானே இங்கே என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கிறேன் .
அஜந்தா ஒவிய பயிற்சிப் பள்ளியை பூந்தமல்லியில் கடந்த 33 வருடங்களாக நடத்திவருகிறேன் ,தபால் மூலம் ஒவியப்பயிற்சி வழங்குவதில் எங்கள் பள்ளிதான் முன்னோடி,தமிழகம் முழுவதும் ஒவிய ஆசிரியராக வேலை பார்க்கும் ஆசிரியர்களில் எழுபது சதவீதம் பேர் எங்களது உருவாக்கம்தான்.
ஒவியத்தில் கார்ட்டூன் போடுவது முதல் கதைகளுக்கு ஒவியம் வரைவது வரை பல பிரிவுகள் இருக்கின்றன யாரும் எந்த வயதிலும் சேர்ந்து பயிலலாம் இது மனதிற்கு மிக இதமான கலையாகும்.
இப்போது போனை பார்ப்பது மட்டுமே வேலையாகப் போய்விட்டது முன்பெல்லாம் கையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர், அவர் யாரிடமோ பேசுகிறார் என்பது புரிந்தது இப்போது காதில் ‛புளூடூத்' போன்ற கருவிகளை மாட்டிக்கொண்டு பேசுகின்றனர் யாரிடம் பேசுகிறன்றனர் என்பதே தெரியவில்லை
ஒரு முறை பஸ்நிலையத்தில் என் எதிரே வந்து நின்ற இளைஞன்,‛ இப்ப எப்படி இருக்கீங்க?' என்றான். நான் சிரித்துக் கொண்டே,‛ நல்லாயிருக்கேன் தம்பி நீங்க யாரு?' என்றேன். அவன் என்னையோ என் பேச்சையோ கவனிக்கவில்லை மீண்டும்,‛ அப்புறம் வீட்ல எல்லோரும் சவுக்கியம்தானே' என்று கேட்டான்.‛ எல்லோரும் சவுக்கியம்தான் தம்பி முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க தெரியலையே?' என்றேன்.
அவன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் விருட்டென்று அங்கு வந்து பஸ்சில் ஏறிக்கொண்டு,‛ உடனே ஆஸ்பத்திரியில சேர்க்கவேண்டியதுதானே சுத்த லுாசா இருக்கீங்க' என்று பேசியபடி சென்றான் அப்பதான் நாம அதுவரை லுாசு மாதிரி இவன்ட்ட பேசிக்கிட்டு இருந்திருக்கோம், அவன் யார்கிட்டோயோ காதில் புளூ டூத் செருகி பேசிக்கிட்டு இருக்கிறான் என்பது புரிந்தது.
இப்படி உலகம் எங்கோயோ எப்படியோ அவசரமாய் போய்க்கிட்டு இருக்கு இந்த அவசர உலகத்தை கட்டுப்படுத்துவது கலை ஒன்றால்தான் முடியும் அது ஒவியக்கலையாக இருந்தால் இன்னும் நல்லது என்றார்.
அவரிடம் பேசுவதற்கான எண்:93802 43070
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement