Advertisement

கையாடல் தடுக்காத அதிகாரிக்கு பதவி உயர்வு!

''இப்போதைக்கு அரசியல் வேண்டாம்னு சொல்லி போட்டாங்களாமா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் கோவை, கோவாலு.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி, இந்த முறை, தேர்தல்ல நிற்காம, ராஜ்யசபாவுக்கு போக நினைச்சார்... அப்புறமா, கட்சியினர் வலியுறுத்தினதால, தர்மபுரியில களம் இறங்கிட்டாருங்ணா...''முதல்ல, தர்மபுரியில, அவரது மனைவி, சவுமியாவை நிறுத்த முடிவு செஞ்சாப்புல... ஆனா, அவங்க மறுத்துட்டாங்களாம்... அதேபோல, ராஜ்யசபா, எம்.பி., பதவியிலயும் தனக்கு விருப்பம் இல்லைன்னு, திட்டவட்டமா சொல்லி போட்டாங்களாமா... அதனால, 'ராஜ்யசபாவுக்கு, யாரை அனுப்புறது'ன்னு, ராமதாஸ் தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்காருங்ணா...'' என்றார் கோவாலு.''எல்லையை தாண்ட, எனக்கு மால் வெட்டியாகணும்னு கறாரா பேசுறாரு பா...'' என, அடுத்து பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''போர்வெல் போடுறப்ப, அதை சுற்றி கொட்டுறதுக்காக, கடலுார், விருத்தாசலத்துல இருந்து, லாரிகள்ல, தஞ்சாவூருக்கு, கூழாங்கற்களை ஏத்திட்டு போறாங்க... இந்த லாரிகள், அரியலுார், ஜெயங்கொண்டம் வழியா தான் போகுது பா...''லாரிகளை, ஜெயங்கொண்டத்துல, ஒரு போலீஸ் அதிகாரி மடக்கி, 'பர்மிட்' இருந்தா, 200 ரூபாயும், 'பர்மிட்' இல்லேன்னா, 300 ரூபாயும் வசூலிக்கிறார்... இப்படி, தினமும் பல ஆயிரம் ரூபாய் பார்த்துடுறாரு பா...''சில லாரி டிரைவர்கள், 'எல்லா ஆவணங்களும் சரியா இருக்கு'ன்னு சொன்னாலும், 'என் எல்லையை லாரி கடக்கணும்னா, 200 ரூபாய் கொடுத்தாகணும்'னு அடாவடியா பேசுறார்...'' என, முடித்த அன்வர்பாயே, ''ராதாகிருஷ்ணன் ஒரு நிமிஷம் நில்லுங்க... முக்கிய விஷயம் பேசணும்...'' என, நண்பரை அழைத்தபடியே, தெருவை பார்த்து, நகர்ந்தார்.உடனே, ''பணம் கையாடலை தடுக்காதவருக்கு, எங்கயாவது பதவி உயர்வு தருவாவளா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார், பெரியசாமி அண்ணாச்சி.''அக்கிரமமா இருக்கே... எங்க ஓய் இந்தக் கூத்து...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''வீட்டு வசதி வாரியத்துல தான்... வாரியத்தின் சிறப்பு திட்டங்களுக்காக, சென்னை, அண்ணாநகர்ல ஒரு கோட்ட அலுவலகம் இருக்கு வே... இங்க, பொதுமக்கள் கட்டுற மாத தவணையில, 1.50 கோடி ரூபாயை கையாடல் பண்ணிட்டாவ... இது, பெரிய பிரச்னையாகி, வசூல் பிரிவுல இருந்த, தினக்கூலி பணியாளரை, போலீசார் கைது செஞ்சாவ வே...''வாரிய விதிப்படி, வசூல் பிரிவுல, நிரந்தர பணியாளர்கள் தான் இருக்கணுமாம்... அதோட, இந்த வசூல் பிரிவை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளை விட்டுட்டு, தினக்கூலியை மட்டும் தண்டிச்சிருக்காவ... அதுலயும், ஒரு முக்கிய அதிகாரிக்கு, சமீபத்துல, பதவி உயர்வு வேற குடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''நந்தகோபால் வரார்... பேச பிடிச்சுண்டா, விட மாட்டார் ஓய்...'' என, குப்பண்ணா எச்சரிக்க, நண்பர்கள், 'மளமள' என, இடத்தை காலி செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தன மருமகனை ராஜ்யசபா உறுப்பினராகி அழகுபார்க்கலாம் அன்புமணி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement